பள்ளிவாசலில் புகுந்து புனித குர்ஆன் மீது சிறுநீர் கழித்து, முஸ்லிம் முதியவரை வெட்டிப்படுகொலை செய்த காவிகளுக்கு தவ்ஹீத் ஜமாஅத் கடும் கண்டனம்!

பள்ளிவாசலில் புகுந்து புனித குர்ஆன் மீது சிறுநீர் கழித்து, முஸ்லிம் முதியவரை வெட்டிப்படுகொலை செய்த காவிகளுக்கு தவ்ஹீத் ஜமாஅத் கடும் கண்டனம்!

ஆந்திரா மாநிலம், தளச்சேறு கிராமத்தில் உள்ள
நூரானி பள்ளிவாசலில் பீஹார் மாநிலத்தை சேர்ந்த 60 வயது முதியவர் முஹம்மத் ஃபாரூக் முஅத்தினாக பணியில் சேர்ந்து ஐவேளைத் தொழுகை நடத்தியதுடன் பள்ளிவாசல் பராமரிப்பு பணியிலும் ஈடுபட்டு வந்தார்.
கடந்த வியாழன் (28.12.17)
வழக்கம்போல் பணியை முடித்துவிட்டு இரவு பள்ளிவாசலில் தூங்கி கொண்டிருந்தார்.

அப்போது பள்ளிவாசலுக்குள் நுழைந்த காவிக் கும்பல் முஹம்மத் ஃபாரூக்கை பயங்கர ஆயுதங்களுடன் மிகக் கொடூரமான முறையில் சாராமாரியாக வெட்டி முகத்தை சிதைத்து, படுகொலை செய்துள்ளனர்.

மேலும் பள்ளிவாசலில் வைக்கப்பட்டிருந்த திருக்குர்ஆனை கிழித்து அதன் மீது சிறுநீர் கழித்து வெறியாட்டம் போட்டுள்ளனர்.

காவிகளின் காட்டு மிராண்டி செயலை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வன்மையாக கண்டிக்கிறது.

குற்றவாளிகளை 24 மணி நேரத்தில் கைது செய்வதாக உறுதி அளித்த காவல்துறை இதுவரை யாரையும் கைது செய்ய வில்லை.

மக்களின் அதிருப்தியை பெற்றுள்ள மத்திய பா.ஜ.க. அரசு முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறைகளை கட்டவிழ்த்து விடுவதன் மூலம் தங்களது ஆட்சியை தக்கவைத்துக் கொள்ள முயற்சிக்கின்றனர்.

மாட்டின் பெயராலும்,
இல்லாத லவ் ஜிஹாத் பெயராலும் முஸ்லிம்கள் படுகொலைகள் செய்யப்படுவது இதை மெய்ப்பிக்கும் வகையில் உள்ளன.

முஸ்லிம்களுக்கு எதிரான இதுபோன்ற படுகொலைகளை நிகழ்த்தினால் மத்தியில் ஆளும் பா.ஜ.க.வின் ஆசியைக் கொண்டு தண்டனைகளில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம் என்ற நம்பிக்கையில்தான் காவிகள் இதுபோன்ற பல கொடூரங்களை அரங்கேற்றி வருகின்றனர்.

முஸ்லிம் முதியவரை கொடூரமாக சிதைத்து, வெட்டி படுகொலை செய்த, குர்ஆனை அவமதித்த, காவிப் பயங்கரவாதிகளை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வன்மையாக கண்டிக்கிறது.

மேலும் இந்தக் கொலைகார கும்பலை உடனடியாக கைது செய்து தூக்கிலேற்றி கொல்ல வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றோம்.

இப்படிக்கு
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்திற்காக,
பொதுச் செயலாளர்
எம்.எஸ்.சையது இப்ராஹீம்