பல்வேறு தடைகளை தாண்டி திருப்பந்துருத்தியில் நடைபெற்ற தவ்ஹீத் பிரச்சாக் கூட்டம்

mov002_00012mov053_00012mov054_0001தஞ்சை தெற்கு மாவட்டம் திருப்பந்துருத்தி கிளையில் 12-7-2009 அன்று குர்ஆன் ஹதீஸ் பின்பற்றுவோம், இணைவைத்தல் ஆகிய தலைப்பில் மார்க்க விளக்க பொது கூட்டம் நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. ஆரம்பத்தில் கூட்டம் நடத்த ஒப்புதல் வழங்கிய ஊர் ஜமாஅத், தலைப்பை பார்த்து விட்டு இங்கு கூட்டம் நடத்தக் கூடாது என்று கடுமையாக எதிர்க்க ஆரம்பித்தது.

சத்தியக் கொள்கை மக்களிடையே எடுத்துறைக்கப்பட வேண்டும் என்பதற்காக TNTJ சகோரர்களும் கூட்டத்தை நடத்த கலமிரங்கினர்.

கூட்டம் நடத்துவதற்கு முதல் நாளான 11-7-2009 அன்று வட்டாட்சியார் தலைமையில் பீஸ் மீட்டிங் நடத்துவதற்கு அரசு ஏற்பாடு செய்தது. இதில் மாவட்டத் தலைவர் சம்பை சாதிக், மாவட்டச் செயலாளர் முஜிபுர் ரஹ்மான், துனைச் செயலாளர் வாஹித், தொண்டரணி செயலாளர் சஃபி மற்றும் நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர். எதிர் தரப்பில் ஊர் ஜமாஅத்தார்களும் கலந்து கொண்டனர்.

ஊர் ஜமாஅத்தார்கள்,

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மதக் கலவரத்தை உண்டு பண்ணுவதற்கும் மதமாற்றத்தை ஏற்படுத்துவதற்காகவே திருப்பந்துருத்தியில் கூட்டத்தை நடத்துகின்றார்கள் இவர்கள் கூட்டத்தை நடத்தினால் ஊருடைய ஓற்றுமை சீர்குலைந்து போய்விடும்

என வாதிட்டனர்.

அதற்கு நமது TNTJ நிர்வாகிகள்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் செயல்பாடுகளை அக்குவேறு ஆணிவேறாக விவரித்தார்கள். தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மேலத்திருப்பந்துருத்தியில் மதமாற்றத்திற்காக கூட்டம் நடத்தவில்லை. முhறாக மனமாற்றத்திற்காகத்தான் கூட்டம் நடத்துகின்றது. இஸ்லாமியர்கள் இடத்தில் உள்ள மூட பழக்க வழக்கங்களை ஒழிக்க வேண்டும். ஏக இறைவனை தவிர வேறு யாரையும் வழிபடக்கூடாது என்பதை வழியுறுத்தி தான் இக்கூட்டம் நடத்தப்படுகின்றது. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் செய்து வரும் சமுதாயப் பணிகளை மக்கள் நன்கு அறிவார்கள்

என வாதிட்டனர்.

நமது நிர்வாகிகள் கூறி கருத்துக்களை புரிந்து கொண்ட தாசில்தார் அவர்கள் (வுNவுது) கூட்டம் நடத்துவதை தடுக்க இயலாது. விரும்பியவர்கள் கலந்து கொள்ளுங்கள் விரும்பாதவர்கள் கலந்து கொள்ளாதீர்கள் என கூறி கூட்டம் நடத்த அனுமதி வழங்கினார்கள்.

பின்னர் கூட்டம் நடைபெறும் நாளான 12-09-2009 அன்று பல்வேறு இடையூறுகளை ஊர் ஜமாஅத்தார்கள் செய்த போதும் பொறுமையுடன் இருந்து, நமது நிர்வாகிகள் 12-9-2009 அன்று மாலை மார்க்க விளக்கக் கூட்டதை நடத்தினர் அல்ஹம்துலில்லாஹ்!

இக்கூட்டத்தில் ஷம்சுல்லாஹ் ரஹ்மானி அஷ்ரஃப் தீன் பிர்தவ்சி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.