பல்லாவரத்தில் நடைபெற்ற காஞ்சி மேற்கு மாவட்டப் பொதுக்குழு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்ட பொதுக்குழு பல்லாவரம் மஸ்ஜிதுஸ் சலாமில் மாநில நிர்வாகிகளான துணைத் தலைவர் கோவை ரஹ்மத்துல்லாஹ், மாநிலச் செயலாளர்கள் தவ்ஃபீக் மற்றும் அப்துல் ஜப்பார் ஆகியோர் முன்னிலையில் நேற்று (28/03/2010 ) ஞாயிற்றுக்கிழமை அன்று நடை பெற்றது.

பொதுக்குழுவில் மாவட்ட கணக்கு சமர்ப்பிக்கப்பட்டது. மேலும் ஜூலை 4 மாநாட்டுக்கு காஞ்சி மேற்கு மாவட்டத்திலிருந்து லட்சக்கணக்கில் மக்களை திரட்டி செல்வது எனவும் தீர்மானிக்கப்பட்டது. இதில் மாவட்ட மற்றும் அணைத்து கிளை நிர்வாகிகளும் பெருமளவில் கலந்து கொண்டனர்.