பன்றிக் காய்ச்சல் வராமல் இருக்க என்ன வழி?

பன்றிக் காய்ச்சல் வராமல் இருக்க என்ன வழி?பன்றிக்காய்ச்சல்… சுவைன் ப்ளு…. H1N1 (Influenza A)… இன்றைய தலைப்புசெய்திகளில் அதிகம் காணப்படுவதும்… மக்களிடம் அதிகமாக பேசப்படுவதும், விவாதிக்ககப்படுவதுமான ஒன்று..

இன்ஷா அல்லாஹ்… இதைப்பற்றி முக்கியமான தகவல்களையும் அதிலிருந்து எப்படி காத்துக்கொள்வது என்பதை இந்தக்கட்டுரையில் பகிர்ந்து கொள்வோம்.

இதில் இடம் பெரும் தகவல்கள் உலக சுகாதார நிறுவனம் மான WHO விடமிருந்து பேறப்பட்டவையாகும்.

இன்றைய சூழலில் இதைப்பற்றி ஆராய்வதற்கு முன் இதிலிருந்து எப்படி நம்மை காத்துக்கொல்லாம் என்பதே முக்கியமாகும். எனினும் சிறு குறிப்பை அறிவது அவசியம் (இன்ஷா அல்லாஹ் தேவைப்பட்டால் இதைப்பற்றி மிக நீளமான கட்டுரை ஒன்றை பிறகு பகிர்ந்து கொள்வோம்).

இது முதன்முதலில் அமெரிக்க நாட்டில் இரு குழந்தைகளுக்கு இருப்பதாக மார்ச் மாதம் பதிவு செய்யப்பட்டது எனினும் இந்த நோயின் மூலம் மெக்சிகோ நாடு என்பதாகவே சொல்லப்படுகிறது (பார்க்க [6]). இது பன்றிப்பன்னையிலிருந்து தொற்றியதாகவே அறியப்படுகிறது. இந்த நோய் முதலில் அதிகம் பாதித்தது மெக்சிகோ நாட்டையே, அதன் பிறகு அமெரிக்க அதிகம் பாதிக்கப்பட்டது. இங்கிருந்துதான் மற்ற நாடுகளுக்கு பரவியதாக நம்பப்படுகிறது. இன்றோடு இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சுமார் இரு லட்சம் ( approx. 1,87,830 – மேலும் உடனுக்குடனான தகவல்களுக்கு பார்க்க [5]).

இது மனிதக்காய்ச்சல், பறவைக்காய்ச்சல் மற்றும் பன்றிக்காய்ச்சல் போன்ற நான்கு தாக்குதல் கிருமிகள் சேர்ந்ததாக புதுவகையான தாக்குதல் கிருமியாக தற்போதய ஆராய்ச்சிகள் மூலம் அறியப்பட்டுள்ளது (பார்க்க [6]) . இது சுவசத்துளிகள் மூலமாக மனிதர்களுக்குள் பரவுவதாக அறியப்படுகிறது (பார்க்க [7-8]). இதற்கு மருந்துகள் இதுவரை கண்டு பிடிக்கப்பட்டதாக தெரியவில்லை (பார்க்க [7]), எனினும் சில நிறுவனங்கள் தாங்கள் மருந்து கண்டுபிடித்து விட்டதாக கூறி வருகின்றன (பார்க்க [2]). தற்போது Oseltamivir Or Zanamivir என்ற ஆண்டி-வைரல் மருந்துகள் பயன்படுத்தப்படுகிறது (பார்க்க [7]) மேலும் கடுமையாக பாதிக்கப்பட்டவர்களுக்கு டாமிபளு (Tamiflu) மருந்து பயன்படுத்தப்படுகிறது (பார்க்க [1]).

இது குழைந்தைகளை அதிகமாக பாதிக்க கூடியதாக உள்ளது. வயதானவர்களுக்கும் அதிகம் பாதிப்பை உண்டு பண்ணக்கூடியதாக உள்ளது. மேலும் இந்நோய் ஆஸ்த்மா, உடல் பருமனானவர்கள், நுரை ஈரல், கிட்னி, ஈரல் சம்பந்தப்பட்ட நோய் உள்ளவர்களுக்கும், சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கும் இது பரவ அதிக வாய்ப்புள்ளது (பார்க்க [3]). இந்தக்கிருமியின் பாதிப்பு ஆரம்பத்தில் அவ்வளவாக தெரியாது, சாதரண காய்ச்சல், ஜல தோசம், உடல் வலி, வயிற்று வலி போன்று தான் இருக்கும். இதற்க்கு இதுவரை தடுப்பு மருந்துகளும் கண்டு பிடிக்கப்பட்டதாக தெரியவில்லை (தடுப்பு மருந்துகள் இல்லை எனவே கூறலாம் – பார்க்க [7]).

இப்படிப்பட்ட நோயின் அறிகுறி அதிலிருந்து எப்படி காத்துக்கொள்வது என்பதை இன்ஷா அல்லாஹ் இப்போது பாப்போம் (இது உலக சுகாதார அமைப்பின் இனைய தளத்திலிருந்து மொழியாக்கம் செய்யப்பட்டது —

நோயின் அறிகுறி:

* சாதரண நோய்க்கும் H1N1 க்கும் வித்தியாசம் காண முடியாது.

பொதுவான அறிகுறிகள்:

* காய்ச்சல், இருமல், தலை வலி, உடல் வலி, தொண்டை வலி மற்றும் அரிப்பு, மூக்கொழுகுதல்.

மருத்துவ நிபுணர்கள் மட்டுமே இந்த நோயை உறுதிப்படுத்த முடியும்.

நோயிலிருந்து எப்படி தற்காத்துக் கொள்வது:

* அதிகமதிகமாக துஆ செய்து இறைவனிடம் பாதுகாப்பு தேடுங்கள்.
* இந்த நோயின் அறிகுறி தெரிபவரிடம் ஒரு மீட்டர் இடைவெளி விட்டு நிற்கவும்
* மூக்கையும் வாயையும் தொடுவதைக் கட்டுப்படுத்திக்கொள்ளவும்
* கை சுத்தத்தை பேணவும், சோப்பு போட்டு அடிக்கடி கையை கழுவவும் (கையை எவ்வாறு கழுவுவ வேண்டும் என்பதை பட விளக்கத்துடன் உலக சுகாதார நிறுவன ஆவணத்தைப்பார்க்கவும் – பார்க்க [9])
* உடல் நலம் குன்றியவர்களிடம் நெருங்கிய தொடர்பைத்தவிர்க்கவும்
* கூட்டமான இடங்களில் நிற்பதைத்தவிர்க்கவும்
* உங்கள் இருப்பிடத்தை காற்றோட்டமானதாக ஆக்கிக்கொள்ளவும்

உங்களுக்கு நோயின் அறிகுறிகள் தென்பட்டால்:
* வீட்டிலேயே இருக்கவும்
* ஓய்வெடுக்கவும், அதிகமாக நீராகாரம் அருந்தவும்
* தும்மும்போதும் இருமும்போதும் மூக்கையும் வாயையும் மூடிக்கொள்ளவும், நீங்கள் கைக்குட்டையோ அல்லது அது போன்ற ஒன்றை தும்மும்போது பயன்படுத்தினால் அதை கண்ட இடங்களில் போடாமல், மற்றவர்களுக்கு பாதிப்பில்லாமல் அப்புறப்படுத்தவும்.
* முகமூடி அணிந்து கொள்ளவும்
* உறவினர் மற்றும் நண்பர்களிடம் தெரியப்படுத்தி அவர்களிடம் சற்று நெருங்கிய தொடர்பை தவிர்ப்பதன் மூலம் அவர்களுக்குப்பரவுவதைத் தவிர்க்கலாம்.

முக்கியமாக தவறாக நம்பிக்கை நம் மக்களிடையே காணப்படுகின்றது, N95 மற்றும் சில வகை முகமூடிகள் அணிவதால் இந்நோயிலிருந்து தப்பிக்கலாம் என்று, இது ஒரு தவறான நம்பிக்கை (பார்க்க [4]). உங்களுக்கு இந்நோய் இருந்து இது மற்றவர்களுக்கு பரவாமல் தடுக்க இதைப்பயன் படுத்தவும்.

எல்லாம் வல்ல அர்ரஹ்மான் இந்நோயிலிருந்து அணைத்து மக்களையும் காப்பாற்றி அருள்வானாக,

References:
[1] WHO recommends Tamiflu in ‘severe’ swine flu treatment, AFP: http://www.google.com/hostednews/afp/article/ALeqM5gHsIlKD0CynlBXAg2wpltiGfm6Qg
[2] Cipla : http://www.xomba.com/cipla_has_launched_new_drug_against_swine_flu_where_virenza_available
[3] Independent: What you need to know about H1N1, http://www.independent.ie/health/swine-flu/what-you-need-to-know-about-h1n1-1855513.html
[4] Myth Busted: N95 Masks Are Useless at Protecting Wearers from Swine Flu, http://www.naturalnews.com/026160_preparedness_swine_flu_outbreak.html
[5] TheAirDB: http://www.theairdb.com/swine-flu/heatmap.html
[6] Wikipedia: http://en.wikipedia.org/wiki/2009_flu_pandemic
[7] World Health Organization: http://www.who.int/csr/disease/swineflu/frequently_asked_questions/what/en/index.html
[8] World Health Organization: http://www.who.int/csr/resources/publications/Adviceusemaskscommunityrevised.pdf
[9] World Health Organization: http://www.who.int/gpsc/5may/How_To_HandWash_Poster.pdf

செய்தி: டாக்டர் எஸ்.ஜாஃபர் அலி PhD (USA)