பனைக்குளத்தில் நடைபெற்ற கோடைகால பயிற்சி முகாம்!

panai_summer_camp_lad_3panai_summer_camp_lad_1இறைவனது மாபெரும் கருணையைக் கொண்டு இராமநாதபுரம் மாவட்டம் பனைக்குளத்தில் 16.05.2007 முதல் 25.05.2007 ஆம் நாள் வரை மாணவியற்களுக்கான தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் நடத்திவரும் கோடை கால நல் ஒழுக்க பயிற்சி முகாம் ஷாஹூல் ஹமீது இல்லத்தில் நடைபெற்றது.
இதில் 75 மாணவியற்கள் இராமநாதபுரம் மாவட்டமத்தில் இருந்தும் சிவகங்கை மாவட்டத்தில் இருந்தும் கலந்து கொண்டனர். ஐந்து தகுதி வாய்ந்த ஆசிரியைகளைக் கொண்டு மிகச் சிறப்பாக வகுப்புகள் நடைபெற்றது. வழக்கம் போல் இவர்களுக்கான செலவு வகைகளை தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநில தலைமை முழுவதுமாக ஏற்று ஆசிரியைகளையும் அனுப்பி வைத்தது சான்றிதழ்களும் கொடுத்தனர்.

இதன் நிறைவு விழா 25.05.2007 ஆம் நாள் மாலை நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் சகோ. எம். அப்துல் ஹமீது தலைமை வகிக்க, மாவட்ட, கிளை நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். பரிசு பெற்ற மாணவர்களுக்கு துபை பனைக்குளம் தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத்தினர் முழுப் பொருப்பையும் ஏற்றுக் கொண்டனர். இவை நீக்கி ஒட்டு மொத்த மாணவியற்களையும் ஒன்று கூட்டி மார்க்க அடிப்படையான தகவல்களை கேள்வி கேட்டு அதிகம் மதிப்பெண்கள் பெற்ற மாணவியற்கள் மூவருக்கு கீழக்கரை அஞ்சல் மூலம் ரூபாய் ஆயிரம் பரிசு கொடுத்தனர்.

அன்று மாலையே பெற்றோர்களும் காப்பாளர்களும் தங்கள் குழந்தைகளை அழைத்துச் சென்றனர். எஞ்சியோர் 26.05.2007 ஆம் நாள் காலை அழைத்துச் செல்லப்பட்டனர். பிரியும் பொழுது மாணவயிற்கள் ஒருவரை ஒருவர் கட்டித் தழுவி கண்களில் நீர்வடிக்க பிரியா விடை பெற்றது கண்ட அனைவரையும் கண்களங்கச் செய்தது. வல்ல இறைவனுக்கே எல்லாப் புகழும் புகழ்ச்சியும். இந்த அளவு வெற்றயடைச் செய்தமைக்கு.