படிப்பில் சிறந்து விளங்க பணம் அவசியமில்லை

பிள்ளைகளை படிக்கவைக்க வேண்டும் என்றாலே ஆயிரகணக்கில், லட்ச கணக்கில் பணங்களை கொட்டிதான் படிக்க வைக்க முடியும், மெட்ரிகுலேஷன் பள்ளி, கான்வென்ட் தனியார் பள்ளி என பல ஆயிரம், ஏன் சில லட்சங்களை செலவளித்தால்தான் நன்றாக படிக்க வைக்க முடியும் என நம்பும் பெற்றோர்களின் முகத்தில் ஆச்சிரியகுறியை ஏற்படுத்தினார் மாநகராட்சி பள்ளில் படித்து 10-ஆம் வகுப்பு தேர்வில் மாநிலதில் முதலிடம் பிடித்த நெல்லை முஸ்லீம் மாணவி ஜாஸ்மீன்.

படிக்க பணம் தேவை இல்லை, பல ஆயிரண கணக்கில் பணம் கேட்கும் பள்ளிகளில் படிக்காமல் அரசு பள்ளிகளில் படித்து நம்பிக்கையும் ஆர்வமும், கடின உழைப்பும் இருந்தால் போதும் கல்வியில் சாதனை புரியலாம் என நமது மாணவர் அணியின் பிரச்சாரங்களுக்கு சான்றாக அரசு பள்ளியில் படித்து வியக்கதகு சாதனை புரிந்துள்ளார் மாணவி ஜாஸ்மீன்.

நல்ல பள்ளியில் படிக்க வைக்கின்றோம் என பல ஆயிரம் செலவளிக்கும் பெற்றோர்கள், கடன் வாங்கி தனியார் பள்ளியில் படிக்க வைக்கும் பெற்றோர்கள், இந்த மாணவியின் சாதனையை பார்த்து சற்று மாற வேண்டும்.

மனைவி மக்களை பிரிந்து வெளி நாட்டில் சம்பாதிக்கும் பணத்தை கல்வி நிறுவனம் நடத்துகின்றோம் என்ற பெயரில் கல்வி கொள்ளை அடிக்கும் கல்வி கூடங்களுக்கு கொடுக்காமல் பிள்ளைகளை அரசு பள்ளியில் சேர்த்துவிட்டு தந்தைமார்கள் தாயகம் வந்து குறைவாக சம்பாதித்தாலும் பிள்ளைகளை தினமும் ஊக்கபடுத்தி படிக்க வைத்தால் உங்கள் பிள்ளைகளும் சாதனை மாணவர்களாக வருவார்கள் என்பதில் சந்தேகம் இல்லை.

பல்வேறு மாயைகளை உடைத்து சரித்திர சாதனை புரிந்துள்ள முஸ்லீம் மாணவி ஜாஸ்மீனை நெல்லை கல்லனையில் உள்ள அவரது வீட்டில் TNTJ மாணவர் அணியினர்  சந்தித்து பரிசு வழங்கினர்.

செய்தி தொகுப்பு :
S.சித்தீக்.M.Tech
TNTJ மாணவர் அணி