கர்நாடக பகுதி TNTJ வின் துணைத்தலைவர் சுலைமான், செயலாளர் முஹம்மத் கனி, பெங்களுரு மாவட்டத் தலைவர் சித்திக், பெங்களுரு மாவட்ட செயலாளர் சலீம், மைசூர் மாவட்டத் தலைவர் ஷம்சுத்தீன் மற்றும் டும்கூர் மாவட்டத் தலைவர் தாஜ் உள்ளிட்டோர் கர்நாடக மாநில ஆளுநர் திரு: H.R. பரத்வாஜ் அவர்களை கடந்த திங்கள் 23.03.2010 அன்று நேரில் சந்தித்து கர்நாடகத்தி்ல் பசு வதை தடைச் சட்டத்திற்கு தடை விதிக்க கோரி மனு வழங்கினார்கள்.
சந்திப்பின் துவக்கத்தில் தாம் ஒரு பாதி முஸ்லிம் என்று பெருமையுடன் தெரிவித்த ஆளுளர், தவ்ஹீத் தான் இஸ்லாத்தின் ஜீவா நாடி என்றும், இதனை பெருபான்மையான முஸ்லிகள் விளங்காமல் இருகிறார்கள் என்றும் தெரிவித்தார். இந்திய சுதந்திரப் போரில் முஸ்லிம்களின் பங்கை பற்றியும், முகலாயர்களின் ஆட்சியில் ஹிந்துக்கள் பாதுகாப்பாக இருந்தனர் என்றும், நபிகள் நாயகம் ( ஸல்) அவர்கள் விதைத்த இஸ்லாம் தான் அரப் தேசம் மற்றும் ஒட்டு மொத்த உலகத்தின் அறியாமை இருளை நீக்கியது என்றும், இஸ்லாம் எவ்வாறு தீண்டாமையை ஒழித்துக்கட்டியது என்றும் வரலாற்று ஒளியில் பட்டியல் இட்டார். மேலும் நபிகள் நாயகம் ( ஸல்) அவர்களின் வாழ்கையில் நடந்த போர்கள் தான் ஜிஹாத் என்றும், இன்றைய நடைமுறையில் சில இளைநர்கள் இதை தவறாக புரிந்து வைத்துள்ளார்கள் என்றும் கூறினார்.