பசுபதிகோயில் கிளையில் நடைபெற்ற பெண்கள் பயான் நிகழ்ச்சி

1(2)4தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் பசுபதிகோயில் கிளையில் கடந்த 27.02.10 சனிக்கிழமை அன்று பெண்களுக்கான மார்க்க விளக்கச் சொற்ப்பொழிவு மற்றும் கேள்வி பதில் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் அந்நூர் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி ஆலிமாக்கள் சிறப்புரை ஆற்றினார்கள். இந்நிகழ்ச்சிக்கு சகோதரி: A.கதீஜா ஆலிமா அவர்கள் தலைமை தாங்கினார். சகோதரி:ரிசாலா ஆலிமா அவர்கள் பொறாமை என்ற தலைப்பிலும், A.நஜ்முன்னிசா ஆலிமா அவர்கள் இப்ராஹீம் (அலை) அவர்கள் மற்றும் குடும்பத்தார்களிடம் பெறும் படிப்பினை என்ற தலைப்பிலும் சிறப்புரை ஆற்றினார்கள்.

நிகழ்ச்சியின் இறுதியாக சகோதரி:ஹம்சியா பேகம் ஆலிமா அவர்கள் நன்றியுரை நிகழ்த்தினார். இக்கூட்டத்தில் சுமார் 80 பெண்கள் கலந்து கொண்டனர்.