மாபெரும் இஸ்லாமிய பகுத்தறிவு மாநாடு! ஆயிரக்கணக்கில் மக்கள் கூட்டம்!!

nellai_manady_310509_11nellai_manady_310509_12nellai_manady_310509_11nellai_manady_310509_10nellai_manady_310509_9nellai_manady_310509_8nellai_manady_310509_7nellai_manady_310509_6nellai_manady_310509_3nellai_manady_310509_2தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் மேலப்பாளையம் ஜின்னா திட­ல் 31.05.09 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி முதல் இரவு 11 மணி வரை இஸ்லாமிய பகுத்தறிவு மாநாடு மற்றும் ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
இம்மாநாட்டிற்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நெல்லை மாவட்டத் தலைவர் எஸ். யூசுப் அலீ தலைமை தாங்கினார். மாவட்டச் செயலாளர் சாதிக் முன்னிலை வகித்தார். மாநில மேலாண்மைக்குழுத் தலைவர் எம்.ஷம்சுல்லுஹா துவக்கவுரை நிகழ்த்தினார்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மூத்த தலைவரும் பிரபல இஸ்லாமிய அறிஞருமான பி. ஜைனுல் ஆபிதீன் இஸ்லாம் ஒரு பகுத்தறிவு மார்க்கம் என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.
அப்போது அவர் தமது உரையில் குறிப்பிட்டதாவது:
கடவுள் இல்லை என்று கூறுவது தான் பகுத்தறிவு என்று பரவலாகக் கருதப்படுகின்றது. ஆனால் உண்மையில் கடவுள் ஒருவன் இருக்கின்றான் என்று நம்புவது தான் பகுத்தறிவுக்கு ஏற்றது. நாத்திகர்கள் என்று கூறப்படுபவர்கள், கடவுளைக் கண்டால் தான் பகுத்தறிவு ஏற்றுக் கொள்ளும் என்று கூறுகின்றனர். ஒரு விஷயத்தைக் கண்ணால் கண்ட பின் ஏற்றுக் கொள்வதை பகுத்தறிவு என்று ஒப்புக் கொள்ள முடியாது. ஏனென்றால் ஆடு, மாடுகள் கூட அப்படித் தான் நடந்து கொள்கின்றன. ஒரு செய­ன் மூலம் மற்றொன்றை சிந்தித்து அறிந்து கொள்வது தான் பகுத்தறிவாகும். அந்த அடிப்படையில் பார்த்தால், வானங்கள், பூமி, சூரியன், சந்திரன் போன்ற படைப்புகளையும், அவை எப்படி ஒரு குறிப்பிட்ட அடிப்படையில் இயங்குகின்றன என்பதையும் சிந்தித்துப் பார்த்தால் நிச்சயம் அவற்றைப் படைத்த ஒரு படைப்பாளன் இருக்கின்றான்; அவன் தான் அவற்றை இயக்குகின்றான் என்று பகுத்தறிவு தீர்ப்பளிக்கும். அந்தக் கடவுள் ஒரே ஒருவன் தான் இருக்க முடியும். பல கடவுள்கள் இருந்தால் அவர்களுக்குள்ளேயே போட்டி ஏற்பட்டு இந்த உலகம் அழிந்து போயிருக்கும். இதைத் தான் பிற மதங்கள் போதிக்கின்றன. ஆனால் இஸ்லாம் மார்க்கம் மட்டுமே ஓர் இறைவன் என்ற கொள்கையில் உறுதியாக நிற்கின்றது. அந்த ஓரிறைக்கு மட்டுமே அனைத்து ஆற்றலும் உள்ளது என்று போதிக்கின்றது. எனவே இஸ்லாமிய மார்க்கத்தின் கடவுள் கொள்கை என்பது முற்றிலும் பகுத்தறிவுக் கொள்கையாகும்.
மேலும் உலகில் நடைபெறும் பல்வேறு தீமைகளுக்கும் கடவுள் மறுப்புக் கொள்கை தான் காரணமாக அமைந்துள்ளது. கடவுளை நம்ப மறுப்பவர்கள், தாம் என்ன தவறு செய்தாலும் அதை பிறர் பார்க்காத அடிப்படையில் செய்தால் தம்மைத் தண்டிக்க யாரும் இல்லை என்று நினைக்கிறான். அதனால் அவன் தவறுகளைத் துணிந்து செய்கின்றான். ஆனால் கடவுளை நம்புபவர்கள், அந்தக் கடவுள் நம்மைத் தண்டித்து விடுவான் என்று பயந்து தீமைகள் செய்வதற்கு அஞ்சுவார்கள்.
இவ்வாறு அவர் தமது உரையில் குறிப்பிட்டார்.
காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை பெண்களுக்கான அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. இக்கண்காட்சியில், மனித உட­ன் அமைப்பு, அது எவ்வாறு செயல்படுகின்றது என்பன போன்ற அறிவியல் விஷயங்கள் குறித்த மாதிரிகள் கண்காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. மேலும் வீடியோ காட்சிகள் மூலமும் இதுகுறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. கரு வளர்ச்சியின் படித்தரங்கள் குறித்து, பதப்படுத்தப்பட்ட ஏழு வகையான சிசுக்களின் மூலம் விளக்கப்பட்டது. மேலும் ஹஜ் வணக்கம் பற்றி, கஅபாவின் மாதிரி வடிவத்தைக் கொண்டு விளக்கமளிக்கப்பட்டது. மேலப்பாளையம் அல்இர்ஷாத் மகளிர் இஸ்லாமிய கல்வியக ஆசிரியைகள், மாணவிகள் இந்நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தனர்.
மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரை பெண்களுக்கான கேள்வி பதில் நிகழ்ச்சியும், அதைத் தொடர்ந்து அல்இர்ஷாத் மகளிர் இஸ்லாமிய கல்வியக ஆசிரியைகள் மற்றும் மாணவிகளின் சொற்பொழிவு நிகழ்ச்சியும் நடைபெற்றது.
இரவு 8 மணிக்கு மேலப்பாளையம் அல்இர்ஷாத் மகளிர் இஸ்லாமிய கல்வியகத்தில் பயின்று பட்டம் பெறும் மாணவிகளுக்கு பட்டமளிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
இதைத் தொடர்ந்து நெல்லை மாவட்ட தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் அனைத்து சமுதாய மக்களுக்காகவும் ஆம்புலன்ஸ் மற்றும் குளிர் பதனப் பெட்டி அர்ப்பணிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மூத்த தலைவர் பி. ஜைனுல் ஆபிதீன், ஆம்புலன்ஸ் மற்றும் குளிர்பதனப் பெட்டியை மக்களுக்கு அர்ப்பணித்து வைத்துப் பேசினார்.
மாவட்டப் பொருளாளர் எஸ்.எம். ஷாகுல் நன்றியுரையாற்றினார்.
இம்மாநாட்டில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநிலப் பேச்சாளர்கள் எம்.எஸ். சுலைமான், ஸைபுல்லாஹ் ஹாஜா, அப்துர்ரஹ்மான் பிர்தவ்ஸி, முஹம்மது அலீ ரஹ்மானி, மாவட்ட துணைத் தலைவர் ஜபருல்லாஹ், துணைச் செயலாளர் பீர் மைதீன், வர்த்தக அணிச் செயலாளர் செய்யது அலீ, மருத்துவ சேவை அணிச் செயலாளர் அப்துல் மஜீத், மாணரணிச் செயலாளர் பைசல், மாணவரணி துணைச் செயலாளர் அன்சாரி, மாநாட்டுக் குழுத் தலைவர் அபுதாபி சிராஜ், மேலப்பாளையம் நகரத் தலைவர் எஸ்.பி. மைதீன், செயலாளர் ரோஷன், பொருளாளர் நிவாஸ் மற்றும் மாவட்ட, நகர நிர்வாகிகள் உட்பட நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி மாட்டங்களி­ருந்தும், சுற்று வட்டாரங்களி­ருந்தும் பெண்கள் உட்பட சுமார் 20 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர்.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மேலப்பாளையம் நகரக் கிளை இம்மாநாட்டை ஏற்பாடு செய்திருந்தது. மாநாட்டில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தர்ஹா வழிபாடு, இறந்து போன பெரியார்களை அழைத்துப் பிரார்த்திப்பது, மனிதர்களைக் கடவுளுக்கு நிகராகக் கருதுவது போன்ற பாவங்களி­ருந்து விலகி முஸ்­ம்கள் அனைவரும் ஓரிறைக் கொள்கையை முழுமையாகப் பின்பற்ற வேண்டும் என்று இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.
இஸ்லாமிய மார்க்கத்தைப் பின்பற்றுவது தான் உண்மையான பகுத்தறிவுக் கொள்கை என்பதை உணர்ந்து நாத்திகவாதிகளும் அறிவுஜீவிகளும் உணர்ந்து இஸ்லாமிய மார்க்கத்தில் இணைய வேண்டும் என்று இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.
சாதி பேதமற்ற சமுதாயத்தை உருவாக்கவும், தீண்டாமைக் கொடுமைகளை அறவே ஒழிக்கவும் இஸ்லாமிய மார்க்கம் ஒன்றே தீர்வு என்பதை உலகம் ஒப்புக் கொண்டுள்ள நிலையில் இஸ்லாம் அல்லாத மதங்களில் உள்ள ஒடுக்கப்படும் சமுதாய மக்கள் இஸ்லாமிய மார்க்கத்தில் தங்களை இணைத்து விடுதலை பெற வேண்டும் என்று இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.
நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்த­ல் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் வேண்டுகோளை ஏற்று மத்தியில் மதசார்பற்ற அரசு அமையும் வகையில் தமிழகத்தில் திமுக கூட்டணிக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்த தமிழக முஸ்­ம் வாக்காளர்களுக்கும் அனைத்து சமுதாய மக்களுக்கும் இம்மாநாடு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது.
அகில இந்திய அளவில் காங்கிரஸ் கட்சி பெற்ற இந்த அமோக வெற்றிக்குக் காரணம், முஸ்­ம்களின் வாக்குகளை ஒட்டுமொத்தமாக காங்கிரஸ் கட்சி பெற்றது தான் என்பதை தேர்தல் முடிவுகள் தெளிவுபடுத்தியுள்ளன. முஸ்­ம்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்று ஆட்சியமைத்துள்ள காங்கிரஸ் கட்சி, ஏற்கனவே முஸ்­ம்களுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் விதமாக சச்சார் கமிட்டி பரிந்துரைகளை உடனே அமல்படுத்த வேண்டும் என்றும், மத்தியில் கல்வி, வேலைவாய்ப்பு, அரசியல் அதிகாரத்தில் முஸ்­ம்களுக்கு 13 சதவிகித இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்றும் இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.
பாபரி மஸ்ஜித் இடிப்புக்குப் பின்னர் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி பெருவாரியான இடங்களில் வெற்றி பெற முடியாத நிலை இருந்தது. இதற்குக் காரணம் பாபரி மஸ்ஜிதை மீண்டும் கட்டித் தருவோம் என்ற வாக்குறுதியை காங்கிரஸ் கட்சி தங்கள் ஆட்சியின் போது நிறைவேற்றாதது தான். இம்முறை முஸ்­ம்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்று ஆட்சியமைத்துள்ள காங்கிரஸ் அரசு, முஸ்­ம்களுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் விதமாக பாபரி மஸ்ஜிதை மீண்டும் அதே இடத்தில் கட்டித் தருவதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.
தமிழகத்தில் முஸ்­ம்களுக்கு 3.5 சதவிகித இடஒதுக்கீடு அளித்த திமுக அரசுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் தீவிரப் பிரச்சாரத்தினால் ஒட்டுமொத்த முஸ்­ம்களும் திமுக கூட்டணிக்கு வாக்களித்தனர். இனிவரும் சட்டமன்றத் தேர்த­லும் முஸ்­ம்களின் இந்த ஆதரவு நிலை நீடிக்கும் வண்ணம், கிறித்தவர்களால் திருப்பியளிக்கப்பட்ட 3.5 சதவிகித இடஒதுக்கீட்டையும் சேர்த்து முஸ்­ம்களுக்கு 7 சதவிகித இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று தமிழக அரசை இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.
தமிழகத்தின் துணை முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள திரு. மு.க. ஸ்டா­ன் அவர்களுக்கு இம்மாநாடு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதுடன், சிறுபான்மையினர் நலத் துறையைப் பெற்றுள்ள துணை முதல்வர் அவர்கள், முஸ்­ம்களின் இட ஒதுக்கீட்டை 7 சதவிகிதமாக உயர்த்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.
கலவரம் நடக்கும் பகுதிகளில் மத்திய அரசு நேரடியாக தானே கையில் எடுக்கும் வகையிலும் அக்கலவரப் பகுதிக்கு சிறுபான்மை, பெரும்பான்மை சமுதாயத்தைச் சார்ந்தவர்கள் சம அளவில் இடம்பெற்றிருக்கும் வகையில் கலவரத் தடுப்பு பாதுகாப்புப் படை நியமிக்கப்படும் என்று 2004 நாடாளுமன்றத் தேர்த­ன் போது காங்கிரஸ் கட்சி வாக்குறுதி அளித்தது. கடந்த ஐந்தாண்டு கால ஆட்சியில் இவ்வாக்குறுதியை காங்கிரஸ் அரசு நிறைவேற்றவில்லை. தற்போது முஸ்­ம்களின் ஆதரவைப் பெற்று ஆட்சியமைத்துள்ள காங்கிரஸ் அரசு உடனடியாக கலவரத் தடுப்பு பாதுகாப்புப் படையை நியமிக்க வேண்டும் என்று இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.
மேலப்பாளையத்திற்கு குடிநீர் வினியோகத்திற்காக கொண்டாநகரத்தி­ருந்து ஏற்கனவே போடப்பட்டுள்ள குழாய்களில் அடிக்கடி பழுது ஏற்படுவதாலும், திட்டமிட்டு உடைப்பு ஏற்படுத்தப்படுவதாலும் பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையான புதிய குடிநீர் குழாய்கள் அமைக்கும் திட்டத்தைத் துவக்கியுள்ள திமுக அரசை இம்மாநாடு பாராட்டுவதுடன், இத்திட்டத்தை விரைவுபடுத்தி உடனே நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.
மேலப்பாளையம் மக்களுக்கு பீடித் தொழிலே பிரதான தொழிலாக உள்ளது. இதனால் பல்வேறு நோய்களின் பாதிப்பும், சுகாதாரக் கேடும் ஏற்பட்டு வருகின்றது. இந்நிலையில் புகை பிடித்த­ன் தீமைகளை மக்களுக்கு உணர்த்தி இப்பழக்கத்தை ஒழிக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. இந்த சமூகத் தீமையை ஒழிப்பதற்கான எந்தவொரு முயற்சியையும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வரவேற்கும் அதே சமயத்தில், பீடித் தொழிலை மட்டும் தங்கள் வாழ்வாதாரமாகக் கொண்டுள்ள மேலப்பாளையம் போன்ற பகுதிகளில் ஆண்களும் பெண்களும் பயன்பெறும் வகையில் மாற்றுத் தொழில்களைக் கண்டறிந்து அதற்கான தொழிற்சாலைகளை அமைக்க மத்திய, மாநில அரசுகள் முன்வர வேண்டும் என்று இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.