நெல்லை மருத்துவமனைகளில் துணியில்லாமல் கொடுக்கப்படும் பிரேதங்கள் – TNTJ புகார்!

நெல்லை அரசு மருத்துவ மனைகளில் பிரேத பரிசோதனை செய்யப்படும் ஆண் பெண் பிரேதங்கள் ஒட்டு துணியில்லாமல் கிடத்தி வைக்கப்படுகின்றது.

மேலும் பிரேத பரிசோதனைக்கு பிறகு உறவினர்களிடம் பிரேதங்கள் துணியில்லாமலே கொடுக்கப்படுகின்றது.

இதனால் இறந்தவரின் உறவினர்கள் குறிப்பாக அக்கா, தங்கை, அண்ணன், தம்பி போன்றவர்கள் பார்க்க கூடாத நிலையில் பிரேதங்களை பார்க்க வேண்டிய அவள நிலை எற்பட்டு வருகின்றது.

இது தொடர்பாக நெல்லை மாவட்டம் TNTJ விற்கு புகார் வந்ததை தொடர்ந்து , பிரச்சனையை முறையாக விளக்கி மருத்துவ மனை அதிகாரிகளிடம் புகார் மனு கொடுக்கப்பட்டது.

இந்த செய்தி கடந்த 14-2-11 அன்று பத்திரிக்கைகளில் வெளியாகியுள்ளது.