நெல்லையில் நடந்த சிறுபாண்மை நல ஆணைய கூட்டத்தில் நெல்லை TNTJ

திருநெல்வேலி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக மக்கள் குறைதீர்க்கும் கூட்ட அரங்கில் சிறுபான்மையினர் கலந்தாய்வு கூட்டம் 18-02-2011, வெள்ளிக்கிழமை காலை 11 மணி அளவில் மாவட்ட ஆட்சித்தலைவர் மு. ஜெயராமன் அவர்கள் தலைமையில் கூட்டத்திற்கு மாவட்ட வருவாய் அலுவலர் ரமணசரஸ்வதி அவர்கள் முன்னிலையில் வகித்தார். இதில் சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு மாநில சிறுபான்மையினரின் ஆணையத் தலைவர் வின்சென்ட் சின்னத்துரை, தமிழ்நாடு மாநில சிறுபான்மையினரின் ஆணைய உறுப்பினர் செயலர் பசீர் அகமது, ஐஏஎஸ் ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பாக மாவட்ட அரசு நலத்திட்ட செயலாளர் ‘குறிச்சிகுளம்’சுலைமான் அவர்கள் கலந்து கொண்டார்கள். இதில் 5 சதவிகித இட ஒதுக்கீடு, முஸ்லீம்களுக்கு பயனில்லாத வக்ஃபு வாரியம் கலைக்கப்படவேண்டும் போன்ற பல்வேறு கோரிக்கைகள் வைக்கப்பட்டது.