நீரழிவு நோய் மற்றும் அது தொடர்பான கண் பரிசோதனை முகாம்-கவுண்டம்பாளையம் கிளை

கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் கிளை சார்பாக 28.12.2014 அன்று ‘நீரழிவு நோய் மற்றும் அது தொடர்பான கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது. இதில் நீரழிவு நோய் மருத்துவர்கள் மற்றும் நிபுணர்கள் மற்றும் கண் பரிசோதனை நிபுணர்களும்  கலந்துகொண்டு ஆலோசனை வழங்கினர். இம்முகாமில் கலந்துகொண்ட அனைவருக்கும் ‘சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டோருக்கான உணவு வகைகள்’ உள்ளடிங்கிய அட்டவணை வழங்கப்பட்டது. மேலும் கண் நோய்கள் சம்பந்தமான ஆலோசனைகளும் வழங்கப்பட்டது. 
இந்த முகாமில் பிற மத சமுதாய சொந்தங்கள் 52 நபர்களும், முஸ்லிம் சமுதாய மக்கள் 55 நபர்களும் கலந்துகொண்டு பயனடைந்தனர். இந்த முகாமில் கலந்துகொண்ட 10 நபர்களைக் கொண்ட மருத்துவ குழுவிற்கு கவுண்டம்பாளையம் கிளை சார்பாக திருமறை குர்ஆன் மற்றும் மனிதனுக்கேற்ற மார்க்கம் ஆகிய நூல்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டு இஸ்லாம் குறித்து தாவா செய்யப்பட்டது.