“நிர்வாகிகள் மற்றும் தாயீக்களின் ஒழுங்குகள்” கத்தர் மர்கஸ் தர்பியா

கத்தர் மண்டல மர்கஸில் கடந்த 17-02-2012 வெள்ளியன்று மதியம் 2:30 மணி முதல் இரவு 10:00 மணி வரை தர்பியா பயிற்சி முகாம்,மண்டல தலைவர் டாக்டர்.அஹ்மத் இப்ராஹீம் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

துவக்கமாக,இப்பயிற்சியின் அவசியத்தை மண்டல தலைவர் டாக்டர்.அஹ்மத் இப்ராஹீம் அவர்கள் விளக்கினார்கள்.

அடுத்து, மௌலவி,அப்துஸ்ஸமத் மதனீ அவர்கள் “இறைவனை பயந்து வாழ்வோம்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

அடுத்து,தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில பேச்சாளர் மௌலவி,அப்துன்நாசிர் அவர்கள் ஆன்லைன் மூலமாக “பலவீனமான ஹதீஸ்கள்”என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

பின்பு,தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தலைவர் மௌலவி,ஜைனுல் ஆபிதீன் அவர்கள் ஆன்லைன் மூலமாக “நிர்வாகிகள் மற்றும் தாயீக்களின் ஒழுங்குகள்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

அடுத்து,மண்டல பேச்சாளர் அன்சார் அவர்கள் “நபிவழி தொழுகையை” செய்முறை பயிற்சியாக செய்து காண்பித்தார்கள்.

அடுத்து, மண்டல செயலாளர் மௌலவி,முஹம்மத் அலீ அவர்கள் “தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நிலைபாடு” குறித்த சிறிய விளக்கம் அளித்தார்கள்.

இறுதியாக,மண்டல துணைத் தலைவர் சகோதரர்.ஜியாவுதீன் அவர்கள் நன்றியுரை ஆற்றினார்கள்.

அனைவருக்கும்,மதிய மற்றும் இரவு உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.