நாமக்கல் மாவட்ட பொதுக்குழு 3.6.2012

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாமக்கல் மாவட்ட பொதுக்குழு கடந்த 03 -06-2012 ஞாயிறன்று காலை 11 மணி அளவில் நாமக்கலி்ல் மாநில துணை தலைவர் சகோதரர் கோவை அப்துர் ரஹீம் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.

முதலில் சகோதரர் ஜகாங்கீர் ஹுசேன் அவர்கள் ஜமா அத்தின் கடந்த வருட செயல்பாடுகள் பற்றியும் செய்த பணிகள் பற்றியும் விளக்கினார், அதை தொடர்ந்து சகோதரர் முஹம்மது ஆசிப் அவர்கள் ஜமாஅத் எப்படி செயல் படவேண்டும் என்ற தலைப்பில் உரை நிகழ்தினார். அதை தொடர்ந்து பொருளாளர் சகோதரர் அபு பக்கர் அவர்கள் நிதி நிலை அறிக்கை வாசித்தார் ஜமாத்தின் வரவு செலவு மற்றும் கை இருப்பு நிலவரங்கள் படிக்கப்பட்டன.

பின்னர் மாநில துணை தலைவர் சகோதரர் கோவை அப்துர் ரஹீம் நிர்வாகிகள் தேர்வு செய்யும் முறை குறித்தும் மற்றும் நிர்வாகிகள் எப்படி செயல் பட வேண்டும் என்றும் விளக்கினார்

பின்னர் புதிய நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்