நாத்தீக விவாத DVD கோவை காட்டூர் கிளையில் மாற்றுமதத்தினருக்கு வீடு வீடாக சென்று விநியோகம்

03112009066 [Desktop Resolution]

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத்துக்கும் நாத்திகர்களுக்கும் இடையே சென்னையில் கடந்த அக்டோபர் மாதம் 11, 12 தேதிகளில் விவாதம் நடைபெற்றது.

இதில் முஸ்லிம்களுக்கு மாபெரும் வெற்றியை ஏக இறைவன் வழங்கியது அனைவரும் அறிந்ததே. ஆனாலும் இந்த விவாதம் பற்றிய விவரங்கள் ஏனைய நாத்திகர்கள் மற்றும் மாற்று மதத்தினரிடையே மிக குறைந்த அளவிலேயே அறியப்படுகின்றது;

03112009065 [Desktop Resolution]இதனால் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதியில் அமைந்துள்ள் TNTJ காட்டூர் கிளையின் சார்பாக இந்த விவாத குருந்தகுடுகளை அதிக அளவில் மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்க முடிவு செய்யப்பட்டது.

அதன் அடிப்படையில் கடந்த 1 வார காலமாக சுமார் 30 மாற்று மத சகோதரர்களுக்கு வீடு தேடி சென்று இந்த DVDக்கள் வழங்கப்பட்டு வருகிறது.

மேலும் அவர்களுக்கு தூய மார்க்கமான இஸ்லாத்தை பற்றியும் அதன் கொள்கை கொட்பாடுகளைப் பற்றியும் எடுத்துரைக்கப்படுகிறது. மதங்களை பின்பற்றுவோரை மடையர்கள் என சொல்லக்கூடிய (போலி)பகுத்தறிவுவாதிகளை தினரவைத்த திருக் குர்ஆண் தமிழாக்கத்தையும் அவர்களுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது.

நாத்திகர்களுடன் பேசுவதையே பெரும் சிரமமாக கருதக்கூடிய மாற்று மத மக்கள் மத்தியில் நாத்திகர்களுடன் நடந்த விவாதம் அவர்கள் இடையே இஸ்லாம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது – அல்ஹம்துலில்லாஹ்.

மேலும் மிக விரைவில் அணைத்து மக்களுக்கும் DVDக்களை கொண்டு சேர்க்க முழு மூச்சுடன் TNTJ காட்டூர் கிளை நிர்வாகிகள் பாடு பட்டு வருகின்றனர்.