நாச்சியார்கோயிலில் நடைபெற்ற பெண்கள் பயான் நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் நாச்சியார்கோயில் கிளையில் 21.03.10 ஞாயிற்றுக்கிழமை அன்று பெண்களுக்கான மார்க்க விளக்க கூட்டம் நடைப்பெற்றது.

இதில் அந்நூர் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி ஆலிமாக்கள் சிறப்புரை ஆற்றினார்கள். சகோதரி:நஸ்ரின் ஆலிமா அவர்கள் நபிவழித் தொழுகை என்ற தலைப்பிலும் சகோதரி:சாரா ஆலிமா அவர்கள் பேச்சின் ஒழுங்குகள் என்ற தலைப்பிலும் சிறப்புரை ஆற்றினார்கள்.

இக்கூட்டத்தில் ஐம்பதுக்கும் மேற்ப்பட்ட பெண்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.