நாகை வடக்கு மாவட்டத்தில் நடைபெற்ற பொதுத் தேர்வு பயிற்சி முகாம்

P1020111 (1)P1020113 (1)P1020127 (1)கடந்த 26 ஜனவரி 2010 அன்று காலை சுமார் 10:30 மணியளவில் குடியரசு தினத்தன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் நாகை (வடக்கு) மாவட்டம், மாணவர்களுக்கான “மாபெரும் கல்வி வழிகாட்டி கருத்தரங்கம்“ மயிலாடுதுறை நகர தவ்ஹீத் மர்கஸில் அல்லாஹ்வின் மிகப்பெரும் கிருபையால் சிறப்பாக நடத்தியது.

அதில் M. நூருல் இஸ்லாம் M.C.A, நாகை (வடக்கு) மாவட்ட மாணவர் அணிச் செயலாளர் தலைமையேற்று நடத்தினார்கள். சிறப்புரையாளர்களாக S. சித்திக் M.Tech, மாநில மாணவர் அணிச் செயலாளர் “தேர்வில் அதிக மதிப்பெண் பெருவது எப்படி?“ என்ற தலைப்பிலும், கலீல் ரஹ்மான் M.B.A, “எங்கு படிக்கலாம், என்ன படிக்கலாம்“ என்ற தலைப்பிலும் சிறப்பாக உரையாற்றினார்கள். H.M. புஹாரி, நாகை (வடக்கு) மாவட்டத் தலைவர் நன்றியுரையாற்றினார்கள்.

இதில் சுமார் 350ற்கும் மேற்பட்ட முஸ்லிம் மற்றும் மாற்றுமத மாணவ, மாணவிகள் தங்களின் பெற்றோர்களுடன் பங்குபெற்று நல்ல பலன் அடைந்தார்கள். மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் சிறந்த கேள்விகள் கேட்ட 5 மாணவ, மாணவிகளுக்கு மாநிலத் தலைமை மூலம் தேர்வு சம்பந்தப்பட்ட சிடிக்கள் வழங்கப்பட்டது. மதியம் 4:30 மணியளவில் நிகழ்ச்சி முடிவடைந்தது.