நாகை மாவட்டம் ஆக்கூரில் TNTJ வின் புதிய கிளை உதயம்!

42-4நாகை (வடக்கு) மாவட்டம் ஆக்கூர் டிஎன்டிஜே புதிய கிளை மற்றும் நூலகம் துவக்கும் நிகழ்ச்சி கடந்த 02-06-2009 அன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் இரண்டு மாணவர்களுக்கு இலவச நோட்டுப் புத்தகங்கள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சிக்கு மாவட்டத் துணைத் தலைவர் ஆக்கூர் ஏ. பஹ்ருதீன் தலைமை தாங்கினார். மாவட்டச் செயலாளர் ஹெச்.எம். புகாரி மற்றும் கூரைநாடு ஜமால் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.