நாகையில் பஸ் விபத்து: மீட்புப் பணியில் ஈடுபட்ட TNTJ

நாகையில் இருந்து மயிலாடுதுறையை நோக்கி வந்து கொண்டுயிருந்த அரசு பேருந்து ஒன்று கடந்த 02.06.2010 அன்று காலை 8.30 மணிக்கு கிளியனூர் அருகே வீரசோழன் ஆற்றில் முன் சக்கர அச்சு முறிந்து கவிழ்ந்து விழுந்து விபத்துக்குள்ளானது.

தகவல் அறிந்த  சங்கரன் பந்தல் TNTJ சகோதரர்கள் பொது மக்கள் உதவியுடன் மீட்புப் பணியியை மேற்கொண்டனர் படுகாயம் அடைந்த பலரையும் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் TNTJ மாவட்ட மற்றும் கிளை நிர்வாகிகள் சேர்த்தனர்.

மீண்டும் 04.06.2010 அன்று மயிலாடுதுறையிலிருந்து கும்பகோணத்தை நோக்கி சென்றுக் கொண்டிருந்த அரசு பேருந்து மாலை 6.30 க்கு மயிலாடுதுறை மேம் பாலம் சுவரை உடைத்துக் கொண்டு செங்குத்தாக கீழேவிழுந்தது விபத்துக்குள்ளானது. இதில் 15 பெண்கள் உள்பட 26 பேர் படுகாயம் அடைந்தனர்.

ஒருவர் உயிர் இழந்தார் சிலரின் நிலமை கவலைக்கிடமாயானது. தகவல் அறிந்ததும் TNTJ மாவட்ட நிர்வாகிகள் கலமிறங்கி மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

இந்த விபத்துக்கும் காரணம் வாகனத்தின் ஸ்டேரிங் ஓட்டுனர் செல்வத்தின் கட்டுபாட்டை மீறி தாருமாறாக ஓடியது தான்.  பொதுவாக கும்பகோணம் டிப்போவின் அரசு பஸ் பல இந்தநிலையில் தான் ஓடுகிறது.