நாகையில் நடைபெற்ற நாகை வடக்கு மாவட்ட பொதுக்குழு கூட்டம்!

45-6-pothukuluகடந்த 21-06-2009 ஞாயிறு அன்று மாலை 4.30 மணியளவில் நாகை வடக்கு மாவட்ட பொதுக்குழு மாநிலச் செயலாளர்கள் எம். தவ்ஃபீக், ஏ. அப்துர் ரஜ்ஜாக் ஆகியோர் தலைமையில் மயிலாடுதுறை தவ்ஹீத் மர்கஸில் நடைபெற்றது. இதில் கீழ்க்கண்ட நபர்கள் புதிய நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்டனர்.

தலைவராக ஹெச்.எம். புஹாரி, துணைத் தலைவ ராக ஏ. முஹம்மது சாதிக் (கூறைநாடு), செயலாளராக ஏ. பஹ்ருதீன் (ஆக்கூர்), துணைச் செயலாளராக ஒய்.ஏ. எஸ். சாதிக் (பொறையார்), பொருளாளராக ஏ. நிஜாமு தீன், மருத்துவ சேவை அணிச் செயலாளராக எஸ். நஜீருதீன் (துளசேந்திரபுரம்), தொண்டரணிச் செயலாள ராக ராஜா (எ) சலாஹுதீன் (வடகரை), வர்த்தக அணிச் செயலாளராக என். முஹம்மது நாஸர் (சீர்காழி), மாணவர ணிச் செயலாளராக இசட். நூருல் இஸ்லாம் (துளசேந்திர புரம்) ஆகியோர் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டனர்.
நிர்வாக தேர்வுக்கு முன்பு மாவட்டத்தில் உள்ள குறைநிறைகள் குறித்து பொதுக்குழு உறுப்பினர்களிடம் கேட்டறியப்பட்டு அவைகள் வரும் காலங்களில் சரி செய்யப்படும் என்று உறுதியளிக்கப்பட்டது.