“நல்லறங்களில் பால் விரையுங்கள்!” – மாபெரும் மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி, கத்தர்

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின், கத்தர் மண்டலம் சார்பாக “மாபெரும் சிறப்பு மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி” கடந்த 13-04-2012 வெள்ளியன்று மாலை 6:30 மணி முதல் 10:00 மணி வரை ,கத்தர் அரசு இஸ்லாமிய அழைப்புத் துறை அலுவலக[ஃபனார்] உள்ளரங்கத்தில்,மண்டல தலைவர் டாக்டர்.அஹ்மத் இப்ராஹீம் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

துவக்கமாக மண்டல தலைவர், டாக்டர்.அஹ்மத் இப்ராஹீம் அவர்கள் “நல்லறங்களில் பால் விரையுங்கள்! ” என்ற தலைப்பில் சிற்றுரையாற்றினார்கள்.

அடுத்ததாக மண்டலப் பேச்சாளர் மௌலவி, அன்ஸார் மஜீதி அவர்கள் “மன அமைதி தரும் வணக்கம்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

அதற்கடுத்து, மண்டலப்பேச்சாளர் மௌலவி,தமீம்,M.I.Sc., அவர்கள் ” அல்குர்’ஆனும்-உலக அதிசயங்களும்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

இறுதியாக, மௌலவி, அப்துஸ்ஸமத் மதனீ அவர்கள் ” அல்லாஹுவிற்காகவே மார்க்கத்தைக் கற்றுக்கொடுப்போர்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

பின்பு, மண்டல செயலாளர் மௌலவி, முஹம்மத் அலீ,M.I.Sc., அவர்கள் ‘கத்தர் மண்டல ஜமாஅத்தின் செயல்பாடுகளை’ விளக்கமாக எடுத்துரைத்தார்கள்.

அடுத்து,’அரபி ஆரம்ப நிலை வகுப்பு’ தேர்விலும்,’இஸ்லாமிய அறிவுப்’ போட்டியிலும் கலந்து கொண்டு அதிக மதிப்பெண்கள் எடுத்த அனைவருக்கும் சான்றிதழ்கள் மற்றும் ஊக்கப்பரிசுகள் வழங்கப்பட்டன.

நிறைவாக,கத்தர் மண்டல துணைத்தலைவர்,சகோதரர்.ஜியாவுதீன் அவர்கள் ‘நன்றியுரை’ ஆற்றினார்கள்.

இந்நிகழ்ச்சியில் இந்திய-இலங்கையை சேர்ந்த ஏராளமான சகோதர- சகோதரிகள் மற்றும் சிறார்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டார்கள்.

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் இரவு உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.