நத்தம் கிளையில் நடைபெற்ற இலவச மருத்துவ முகாம்

Copy of 2Copy of Copy of 2இராமநாதபுரம் மாவட்டம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நத்தம் கிளையின் சார்பாக கடந்த 28 .02 .2010 அன்று காலை 10.00 மணி முதல் பிற்பகல் 03.00 மணி வரை நத்தம் தவ்ஹீத் ஜமாஅத் பள்ளிவாசலில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.

இதில் எழும்பு , மூட்டு , சம்பந்தமான நோய்களுக்கு டாக்டர் A.கலிலூர் ரஹ்மான் M.B.B.S D.ortho, M.S.ortho… அவர்களுகம்
சர்க்கரைநோய் , இரத்தக்கொதிப்பு , மாரடைப்பு சம்பந்தமான நோய்களுக்கு டாக்டர் P.K.ஜவஹர்லால் M.D,DM (cardiolaj) அவர்களும் ஆலோசனை வழங்கி , தேவையானவர்களுக்கு sugar test, Bp, EcG test, செய்தனர் , மேலும் அனைவருக்கும்  மருந்துகள்  இலவசமாக வழங்கப்பட்டது .

நத்தம் பகுதியை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து சுமார் 380  நபர்களுக்குமேல் இதில் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.

சிறப்பு விருந்தினர்களாக மாவட்ட செயலாளர் சகோதரர் ஆரிப்கான் ,துணைத் தலைவர் முபாரக் , கிழக்கரை அனிஸ் ரஹ்மான் .மற்றும் கிளை  தலைவர் M .அக்பர் அலி செயலாளர் M.முஹம்மது தாஹா து.தலைவர் A.அஹமது நியாஸ் து .செயலாளர் S.அபுல் ஹசன் , பொருளாளர் S.சுபோதர் காதர் மற்றும் கிளை சகோதர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்