நடமாடும் ஏகத்துவ நூலகம் – திருவாரூர் TNTJ வின் புதிய முயற்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம் சார்பாக ஏகத்துவ புத்தகங்கள் மற்றும் சீடிக்கள்  கொண்ட நடமாடும் நூலகம் நேற்றைய முன்தினம் (10-10-2010) ஆரம்பிக்கப்பட்டது. ஒலி பெருக்கிகள் போன்ற சாதனங்கள் இதில் பொருத்தப்பட்டுள்ளது.

இதை மாநிலத் தலைவர் பக்கீர் முஹம்மது அல்தாஃபி அவர்கள் துவங்கி  வைத்தார்கள்.  புதிய முறையிலானா இந்த ஏகத்துவ பிரச்சாரம் பகுதி மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. அல்ஹம்துலில்லாஹ்!