நக்கீரனை கண்டிப்பது நியாயமா? விமர்சனத்திற்கு பதில்!

நான் தான் நபிகள் நாயகம் என்று நித்தியானந்தா கூறியதாக செய்தி வெளியிட்ட நக்கீரனைக் கண்டித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் போராட்டம் நடத்தியதை முஸ்லிம்களில் சிலர் அறியாமல் “நித்தியானந்தா கூறியதைத் தானே நக்கீரன் வெளியிட்டது இதற்காக நக்கீரனைக் கண்டிப்பது என்ன நியாயம் என சில கேள்வி எழுப்புகின்றனர்.

இப்படி கேட்பவர்கள் நக்கீரனைச் சரியாக வாசிக்கவில்லை.

நித்தியானந்தா நக்கீரன் நிருபருக்கு அப்படி பேட்டி கொடுத்ததாக நக்கீரன் சொல்லவில்லை. அல்லது இந்த நூலில் இப்படி குறிப்பிட்டார் என்றும் சொல்லவில்லை. அல்லது அப்படி உரை நிகழ்த்தினார் என்றும் நக்கீரன் அந்தச் செய்தியில் கூறவில்லை.

நான் தான் நபிகள் நாயகம் …. என்பது போல் மக்களை ஏமாற்றும் வகையில் பேசுவார் என்று தான் நக்கீரன் செய்தி வெளியிட்டது.

இதில் இருந்து நித்தியானந்தா அப்படி கூறக்கூடியவர் என்று ஊகத்தைத் தான் நக்கீரன் செய்தியாக்கி உள்ளது. நித்தியானந்தா அப்படிச் சொன்னதாக நக்கீரனின் செய்தி அமையவில்லை.

மதுரை ஆதீனம் நபிகள் நாயகத்தை சங்கராச்சாரியுடன் ஒப்பிட்டுப் பேசிய செய்தியை நக்கீரன் வெளியிட்ட போது அது குறித்து நம் சகோதரர்கள் நக்கீரனில் தொலை பேசி மூலம் விசாரித்தனர். மதுரை ஆதீனம் அவ்வாறு பேசியதற்கு வீடியோ ஆதாரம் உள்ளது என்று நக்கீரன் பதில் சொன்னது. இவ்வாறு நக்கீரனிலும் வெளியிட்டது.

ஆனால் நித்தியானந்தா நபிகள் நாயகம் பற்றி அப்படிச் சொன்னார் என்பதற்கு ஆதாரம் கேட்ட போது எந்த ஆதாரத்தையும் நக்கீரனால் சொல்ல முடியவில்லை. நபிகள் நாயகத்தைப் பற்றி பேசினால் தான் பரபரப்பு ஏற்படும் என்று திமிராக நக்கீரன் பதில் சொன்னது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைப் பற்றி அவர்களின் கண்ணியம் பாதிக்கும் வகையில் எழுதினால் செய்திக்கு பரபரப்பு ஏற்படும். அதனால் பத்திரிகையின் விற்பனை அதிகரிக்குமென்பதற்காக நபிகள் நாயகத்தை தனது வியாபாரத்துக்கு நக்கீரன் பயன்படுத்திக் கொண்டது.
எனவே நித்தியானந்தா சொன்னதைத் தான் நக்கீரன் வெளியிட்டது என்பது பச்சைப் பொய்யாகும்.

நித்தியானந்தாவைப் பற்றி என்ன எழுதினாலும் அது பற்றி அவர் வந்து மறுக்க மாட்டார் என்பதால் தைரியமாக அந்தக் கற்பனைச் செய்தியை வெளியிட்டது.

இந்தப் போக்கை நாம் அனுமதித்தால் ஒவ்வொருவரும் நபிகள் நாயகம் பற்றி எதையாவது கற்பனையாக எழுதும் நிலை ஏற்படும்.
எனவே நாம் நடத்திய போராட்டம் முற்றிலும் சரியானதே.

அடுத்ததாக நித்தியானந்தா அப்படி சொன்னால் அதைப் பரப்புவதும் சட்டப்படி குற்றமாகும்.

எவனாவது நபிகள் நாயகம் பற்றி கீழ்த்தரமாகப் பேசினால் அதைப் பரப்புவதும் குற்றம் என்றே நாம் கருதுகிறோம். நபிகள் நாயகத்தின் மீது அன்பு வைத்துள்ள அனைவரும் அப்படித் தான் கருத வேண்டும்.

நபிகள் நாயகத்தின் கண்ணியத்தைக் குலைக்கும் வகையில் எவனாவது ஒரு அரங்கத்தில் பேசினால் அதை ஒரு மீடியா உலகமெங்கும் கொண்டு செல்வதை உண்மை முஸ்லிம்கள் ஒப்புக் கொள்ள மாட்டார்கள்?

தமக்கு இப்படி ஒரு நிலை நேர்ந்தால் அப்படிக் கூறியவன் மீது மட்டும் தான் நடவடிக்கை எடுப்பார்களா? அதை வெளியிட்ட பத்திரிகை மீதும் வழக்குப் போடுவார்களா?

ஷம்சுத்தீன் காசிமி என்பவர் ஜும்மா உரையில் நக்கீரனை நியாயப்படுத்திப் பேசியுள்ளார்.

நித்தியானந்தா சொன்னதைத் தான் நக்கீரன் வெளியிட்டது என்று நக்கீரன் கோபால் அவரிடம் பேசி விட்டாராம். கோபால் பேசி விட்ட பிறகு நபிகள் நாயகம் எல்லாம் ஒரு பொருட்டாக இவருக்குத் தெரியவில்லை. எங்களிடமும் தான் அப்படி கோபால் பேசினார். நித்தியானந்தா அப்படி பேசியதற்கு என்ன ஆதாரம் என்று நாம் கேட்டோம். பதில் இல்லை அப்படியே எவனாவது இது போல் கூறினால் அதைப் பரப்புவதும் குற்றம் என்று தெரிவித்தோம்.

சம்சுத்தீன் காசிமி பாலியல் சேட்டை செய்தார் என்று ஒருவன் கூறி அதை ஒரு பத்திரிகை வெளியிட்டால் சொன்னதைத் தான் வெளியிட்டார்கள் என்று காசிமி எடுத்துக் கொள்வாரா? ஷம்சுத்தீன் காசிமி பற்றி எத்தனையோ பேர் பலவாறாக நம்மிடம் சொல்லி இருக்கின்றனர். அதை உணர்வு ஏட்டில் வெளியிட்டுப் பரப்பினால் சொன்னதைத் தான் பரப்பினார்கள் என்று பதில் சொல்ல காசிமி தயார் என்றால் அதை அறிவிக்கட்டும்.

நபிகள் நாயகம் பற்றி எவனாவது எதையாவது சொல்லி அதை இனி மேல் யார் வெளியிட்டாலும் வெளியிட்டவர்களை நாம் கண்டித்துப் போராடுவோம். இன்னும் பலர் இது போல் பேசுவதற்கு இவர்கள் தூண்டுகிறார்கள் என்பதால் இவர்களுக்கு முட்டுக் கொடுக்க மாட்டோம்.
ஷம்சுத்தீன் காசிமியின் முகத்திரையைக் கிழிக்கும் நிகழ்ச்சி நாளை இமயம் டிவியில் ஒளிபரப்பாகும். இன்ஷா அல்லாஹ்