தொழுகையின் அவசியம் – குவைத் பிளாக் 6 பகுதி பயான்

கடந்த 2-3-2012 அன்று வெள்ளிக்கிழமை ஃபஜ்ரு தொழுகைக்கு பிறகு குவைத் மண்டலம் சபா அல் நாசர் என்ற ஏரியாவில் முதன் முறையாக தமிழ் பேசக்கூடிய சகோதரர்களை ஒன்றிணைத்து குவைத் பிளாக் ஆரில் உள்ள பள்ளியில் சொற்பொழிவு ஏற்ப்பாடு செய்யப்பட்டது.

இதில் குவைத் மண்டல தலைவர் சகோதரர் ராஜா சரிஃப் அவர்கள் கலந்துக் கொண்டு தொழுகையின் அவசியம் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.

பின்னர் சகோதரர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்தார்.

வந்திருந்த சகோதரர்கள் அந்த பகுதியில் இது போல் வாரம் தோறும் தமிழில் சொற்பொழிவு நடத்த வேண்டும் என கேட்டுக் கொண்டனர்.அதற்கிணங்க வருகிற 16-3-2012 வெள்ளிகிழமை முதல் வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சிக்கு ஏற்ப்பாடு செய்யப்பட்டுள்ளது.இன்ஷா அல்லாஹ்