தொண்டி கிளையில் நடைபெற்ற தாஃவா நிகழ்ச்சிகள்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ராமநாதரம் மாவட்டம் தொண்டி கிளையில் கடந்த 2-7-2011 அன்று பெண்களுக்கான மாதாந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் யாசிர் அவர்கள் உரையாற்றினார்கள். பெண்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

மேலும் கிளை சார்பாக தினமும் மக்ரிப் தொழுகைக்கு பிறகு குர்ஆன் விளக்கவுரை நிகழ்ச்சி நடைபெற்று வருகின்றது.

மேலும் கடந்த 3-7-2011 , 10-7-2011 ஆகிய தேதிகளில் கேபில் டிவி கேள்வி பதில் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் டிவி வாயிலாக கேள்விகள் கேட்கப்பட்டு தொலைபேசி மூலம்  நேயர்கள் அதற்குரிய பதிலை தெரியப்படுத்தினர்.

மேலும் கடந்த 8-7-2011 அன்று கிழக்கு தெருவில் பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் யாசிர் அவர்கள் உரையாற்றினார்கள். பின்னர் கேள்வி பதில் நிகழ்ச்சி நடைபெற்றது.

மேலும் கிளை சார்பாக பராஅத் இரவு குறித்த நோட்டிஸ் சுற்றியுள்ள பகுதிகளில் விநியோகம் செய்யப்பட்டது.

மேலும் கடந்த 18-7-2011 அன்று நடைபெற்ற சொற்பொழிவில் அல்லாஹ்வின் அருக்கொடை என்ற தலைப்பில் ஒய்சுல் அவர்கள் உரையாற்றினார்கள்.

மேலும் கிளை சார்பாக சுவர்களில் திருக்குர்ஆன் வசனங்கள் எழுதப்பட்டுள்ளது.