தேங்காய்பட்டிணத்தில் கடற்கரையில் நடைபெற்ற நோன்பு பெருநாள் திடல் தொழுகை

cimg8781cimg8788cimg8780cimg8774cimg8809cimg8808குமரி மாவட்டம் தேங்காய்பட்டணம் கடற்கரை திடலில் காலை 7.30 மணி அளவில் சகோ. அக்பர் பெருநாள் தொழுகை நடத்தினார்.சகோ. நூறுல் அமீன் பெருநாள் உரை நிகழ்த்தினார். இந்நிகழ்ச்சியில் 750க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

முடிவில் செய்யது அலி என்ற சகோதரர்க்கு ரூபாய் 35000.00 பெருமான மூன்று சக்கர (Honda activa three weeler) வாகனம் அன்பளிப்பாக தேங்காய்பட்டணம் TNTJ கிளை சார்பாக புதுக்கடை காவல் துறை ஆய்வாளர் திரு.ஐயப்பன் அவர்கள் வளங்கினார்.

ஈகை திருநாளின் நோக்கம் நிறை வேறிய மகிழ்ச்சியில் மக்கள் ஒருவருக்கொருவர் வாழ்த்துக்கள் தெரிவித்து கலைந்து சென்றனர்.

இந்நிகழ்ச்சியை தேங்காய்பட்டணம் TNTJ கிளை தலைவர் சகோ. சாதிக் தலைமையில் நிர்வாகிகள் அனைவரும் சிறப்பாக செயல்பட்டு நிகழ்ச்சி வெற்றி பெற கடுமையாக களப்பணியாற்றினர். அல்ஹம்துலில்லா!!!