தென்காசி TNTJ சார்பாக 120 ஏழை மாணவர்களுக்கு இலவச நோட்டுபுத்தகம்!

42-2b42-2aதென்காசி டிஎன்டிஜே கிளையின் சார்பாக அனைத்து சமுதாயத்தைச் சேர்ந்த 120 ஏழை எளிய மாணவ, மாணவியர்களுக்கு இலவச நோட்டுப் புத்தகங்கள் வழங்கும் நிகழ்ச்சி கடந்த 07-06-2009 அன்று தென்காசி காட்டுபாவா உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.

நகரத் துணைச் செயலாளர்கள் எஸ். ஜலாலுதீன் தலைமை தாங்கினார். மாவட்டத் துணைத் தலைவர் ஜஃபருல்லாஹ், நகரத் தலைவர் அப்துல்லாஹ், துணைத் தலைவர் எஸ். மைதீன், பொருளாளர் கே. மைதீன் மற்றும் அனைத்து கிளை வார்டு நிர்வாகிகளும் முன்னிலை வகித்தனர்.

கடையநல்லூர் இஸ்லாமிய கல்லூரி மாணவர்கள் முஹம்மது அலி, முஹம்மது யூசுப் சிறப்புரையாற்றினார். முடிவில் 19, 30 ஆகிய வார்டுகளின் பொறுப்பாளர் எம். அப்துல் அஜீஸ் நன்றியுரையாற்றினார். விழா ஏற்பாடுகளை நகர நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர்.