தூத்துக்குடி மாவட்ட கலக்ட்டர் அலுவலகத்தில் கருத்தாய்வு கூட்டம் – தூத்துகுடி நிர்வாகிகள் பங்கேற்பு

தமிழக அரசு சிறுபான்மை மக்களுக்காக செயல்படுத்தப்படும் செயல்திட்டங்கள் மக்களிடம் சரியான முறையில் சென்றடைகிறதா என்பதை ஆய்வு செய்யும் முகமாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் சிறுபான்மை ஆணையத்தின் சார்பாக கருத்தாய்வு கூட்டம் கடந்த 17.2.11 அன்று காலை 11 மணி முதல் 1 மணி வரை நடைபெற்றது.

இக்கூட்டத்தில் தமிழ்நாடு சிறுபான்மையினர் நல ஆணைய சேர்மன் பாதிரியார் வின்சென்ட் சின்னதுரை, பஷீர் அஹமது ஐஏஎஸ். உறுப்பினர் செயலர் மற்றும் மௌரிய மெத்தபால் ஆகியோர் கலந்துகொண்டார்கள்.

இதில் இஸ்லாமிய கிறிஸ்தவ சமுதாய முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டார்கள்.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக மாவட்ட தலைவர் அப்பாஸ், மாவட்ட செயலாளர் அக்தர் அய்யூப், மாவட்ட துணை தலைவர் மவ்ஜூது ஷமான், அன்சாரி, ஆகியோர் கலந்து கொண்டார்கள்.

இக்கூட்டத்தில் சிறுபான்மை இன மக்களுக்கு கல்வி குறித்தும் மற்றும் தொழில் துவங்க வட்டியில்லாமல் கடனுதவி குறித்து வழியுறுத்தப்பட்டது. மேலும் சிறுபான்மையின மக்களுக்காக செயல்படுத்தப்பட வேண்டிய திட்டங்கள் மக்களிடம் சென்றடைவதற்காக அடிக்கடி விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்தப்பட வேண்டும் என்று வாய்மொழியாகவும் எழுத்து மூலமாகவும் தெரிவிக்கப்பட்டது.