தூத்துக்குடி மாவட்டம் நடத்திய மார்க்க அறிவுப் போட்டி!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தூத்துக்குடி மாவட்டத்தில் மாணவ மாணிவியருக்கான மார்க்க அறிவுப் போட்டி நடத்தப்பட்டது. இப்போட்டியின் மூலம் மாணவர்கள் மட்டுமல்லாது அவர்களது வீட்டில் உள்ளவர்கள், அண்டை வீட்டார்கள் மற்றும் அவர்களுக்கு தெரிந்தவர்கள் என அனைவரும் மார்க்க அறிவை வளர்த்துக் கொள்ளும் வண்ணம் போட்டி அமைக்கப்பட்டது.

மாணவர்களுக்கு கொடுக்கப்பட்ட கேள்விகளை அவர்கள் மேற்குறிப்பிட்டவர்களிடம் காண்பித்து பதிலை கேட்டரிய வேண்டும். இவ்வாறு யார் அதிக நபர்களிடம் கேட்கின்றார்களோ அவர்களுக்கு முதல் பரிசாக தங்க நாணம் என அறிவிக்கப்பட்டது!

இதன் மூலம சுமார் 2100 நபர்களிடம் மார்க்க அறிவை வளர்த்துக் கொள்ளும் வண்ணம் கேட்டகப்பட்ட கேள்விகள் பரிமாறப்பட்டது!

இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி கடந்த 13.3.2010 அன்று மாவட்ட மர்கஸில் நடைபெற்றது. முதல் இடத்தை பிடித்த மூன்று மாணவர்களுக்கு தங்க நாணம் பரிசாக வழங்கப்பட்டது. மேலும் இரண்டாம், மூன்றாம் மற்றும் ஆறுதல் பரிசுகள் வழங்கப்பட்டது!

பின்னர் சகோ அப்துல் மஜித் உமரி அவர்கள் உரையாற்றினார்கள்.