தூத்துக்குடி புபேட்மாநகரம் கிளையில் நடைபெற்ற மார்க்க் விளக்கக் கூட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தூத்துக்குடி மாவட்டம் பேட்மாநகரம் கிளை சார்பாக மார்க்க விளக்கப் பொதுக்கூட்டம் மற்றும் வட்டியில்லா கடன் உதவி திட்டம் அறிமுக நிகழ்ச்சி கடந்த 21.03.2010 அன்று மாலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை நடைபெற்றது.

ஒட்டுமொத்த ஊரே திரண்டு வந்து இந்நிகழ்ச்சியை தடுக்க அனைத்து முயற்சியும் மேற்கொண்டார்கள். மாவட்ட நிர்வாகம் களத்தில் இறங்கி பெரும்திரளான கூட்டத்தை கூட்டி இந்நிகழ்ச்சியை சிறப்பாக நடத்தி முடித்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்!.

இந்நிகழ்ச்சியில் சம்சுல்லுஹா ரஹ்மானி, அன்சாரி ஆகியோர் உரையாற்றினார்கள்.

400 ஆண்களும் 100 பெண்களும் கலந்துகொண்டார்கள். சகோதரர் இமாம் பரித் அவர்கள் நன்றியுரை கூறினார்.