தூத்துகுடியில் நடைபெற்ற இரத்த தான முகாம்

100_0873100_0869100_0871100_0874100_0873தமிழகத்தில் இரத்ததான வேவையில் தொடர்ந்து முதலிடம் வகித்துவரும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மற்றும் ஏரல் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் இணைந்து குடியரசு தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் பேட்மாநகரத்தில் வைத்து 24.01.2010 அன்று ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி முதல் 2 மணிவரை மாபெரும் இரத்ததான முகாம் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாவட்ட தலைவர் லியாகத் அலி தலைமை தாங்கினார். டாக்டர்  மிரான் எம்.பி.பி.எஸ் அவர்கள் முன்னிலை வகித்தார்கள்.

திருவைகுண்டம் காவல் ஆய்வாளர் P.நடராஜன் அவர்கள் துவக்கி வைத்தார்கள். தூத்துக்குடி அரசு பொது மருத்துவமனை இரத்த வங்கி பொறுப்பாளர் டாக்டர் சாந்தி, ஏரல் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் வேலரசி எம்.பி.பி.எஸ், ஆழ்வாரப்பன், வேலுமணி ஆகியோர் கலந்து கொண்டார்கள்.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாவட்ட நிர்வாகிகள்அப்பாஸ், இபுராஹிம் அக்தர் அய்யூப், ஹாஜா, சுல்தான், அப்துஸ்ஸமது, அன்சாரி ஆகியோர் கலந்து கொண்டனர்.

53 நபர்கள் இரத்ததானம் செய்தார்கள். மாவட்ட மருத்துவரணி செயலாளர் மவ்ஜுதுஷமான் நன்றியுரை கூறினார் அடுத்தமாதம் தூத்துக்குடியில் வைத்து மாபெரும் இரத்ததானம் நடைபெற இருக்கிறது.