தூதரக அதிகாரிகளின் மெத்தனம்: உயிரோடு ஊர் போக விரும்பியரை பிணமாக அனுப்பும் பரிதாபம்!

மஸ்கட்டில் வேலை செய்த பீபி லுமத என்ற 40 வயது பெண்மணி கத்தர் விமான நிலையத்தில் நேற்று (சனிக்கிழமை – 9/10/2010) மரணம் அடைந்தார். இவர் மஸ்கட்டில் இருந்து சென்னைக்கு தோஹா, கத்தார் வழியாக வர இருந்தார். வரும் வழியில் தோஹாவில் (கத்தார்) அவரின் பாஸ்போர்ட் தொலைந்துவிட்டது, இதை அடுத்து, அவர் இந்தியாவிற்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்டு மீண்டும் மஸ்கட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

பீபி லுமத-வின் குடியேற்ற அனுமதியை புறப்படுவதற்கு  முன் ரத்து செய்ததாலும் மேலும் அவரது பாஸ்போர்ட் தொலைந்ததாலும், மீண்டும் அவரை மஸ்கட்டில் அனுமதிக்க அதிகாரிகள் மறுத்து விட்டனர். இதனால் அவர் விமான நிலையத்தில் தங்கும் அவல நிலை ஏற்ப்பட்டது. மேலும் இவரது நிலை இந்திய தூதரகத்திற்கு கடந்த திங்கள் கிழமை (4/10/2010) தெரியப்படுத்தப்பட்டது.

இந்திய அதிகாரிகள் வருவதாக உறுதி அளித்துள்ளனர், பல முறை விமான காவல்துறை இந்திய தூதரகத்தை தொடர்பு கொண்டுள்ளது, இந்திய அதிகாரிகள் மீண்டும் மீண்டும் தனது வெற்று வாக்குறுதியை எப்போதும் போல வாரி வழங்கியுள்ளனர்.

இவருக்கு தண்ணீர், உணவு மற்றும் படுக்கை வசதியை கத்தார் விமான அதிகாரிகள் வழங்கியுள்ளனர். ஐந்து நாளாகியும் இந்திய தூதரக அதிகாரிகள் இவரை கண்டு கொள்ளவில்லை. இதனால் இவரது உடல்நிலை மிகவும் கவலைக்கிடமானது. இவரை இப்ன் சினா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படும் வழியில் நேற்று முன்தினம் சனிக்கிழமை (9-10-2010)  மரணம் அடைந்துள்ளார். இன்ன லில்லாஹி வ இன்ன இலிஹி ராஜிவூன்.

இதற்கு பொறுப்பேற்க வேண்டிய மஸ்கட் இந்திய தூதரக அதிகாரி அணில் வாத்வா, “இது கவைலக்கிடமானது” எனது தனது பொறுப்பற்ற போக்கிற்கு சப்பைக்கட்டு கட்டியுள்ளார்.

இந்த தகவல் இவரது சொந்தங்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. இவரது உடல் இந்தியாவிற்கு கொண்டு செல்ல ஆவணங்கள் செய்யப்பட்டுள்ளது.

உயிரோடு இருக்கும் போது அவரை தனது சொந்தங்களை சந்திக்க விடாத இந்த சட்ட சம்பிரதாயங்கள், உயிரற்ற சடலத்தை சொந்தங்களை சோகத்துடன் சந்திக்க முழு வீச்சில் செயல்படுகிறது என்பது கொடுமையிலும் கொடுமை.

மேலும் இந்திய தூதர அதிகாரிகளின் இந்த பொடுபோக்கான செயல்பாடு வெளிநாட்டு வாழ் இந்தியர்களிடையே மிகுந்த கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்திய அரசு, வெளிநாடு வாழ் இந்தியர்கள் விஷயத்தில் மனிதாபிமானத்தை கடைபிடிக்குமா? இந்த இந்திய அதிகாரி அணில் வாத்வா மற்றும் இதற்க்கு காரணமானவர்களை வேலை நீக்கம் செய்யுமா இந்திய அரசு?

சில செய்திகள் அவர் திருவனந்தபுறத்திற்கு செல்லவிருந்ததாக வெளியுட்டள்ளது.

http://www.ndtv.com/article/india/indian-woman-dies-after-being-stranded-due-to-passport-loss-58567?trendingnow

http://news.google.com/news/search?pz=1&cf=all&ned=us&hl=en&q=doha+woman+dies

செய்தி- அல் மதராஸி