துவங்கியது மாநில தலைமையத்தில் 30 நாள் பேச்சாளர் பயிற்சி முகாம்

இறைவனின் மகத்தான அருளைக் கொண்டு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சத்திய பிரச்சாரப் பணியை எவ்வித தயக்கமுமின்றி அல்லாஹ்வும் அவனுடைய தூதர் நபி (ஸல்) அவர்களும் காட்டிய அடிப்படையில் மிக வீரியமாக முஸ்லிம்கள் மத்தியில் எடுத்துச் சொல்லி வருகின்றது.

இதன் விளைவாக தமிழகத்தின் பல பகுதிகளிலும், தமிழகத்திற்கு வெளியேயும், வெளிநாடுகளிலும் இந்த ஜமாஅத் மகத்தான வளர்ச்சி கண்டுவருவது நாம் அனைவரும் அறிந்ததே! அல்ஹம்துலில்லாஹ்!

”நாளொரு கிளையும், பொழுதொரு மர்கஸ்களுமாக” நம் ஜமாஅத் மிகப்பெரிய வளர்ச்சி கண்டு வரும் இவ்வேளையில், நமது கிளைகள் மற்றும் ஜும்மா மர்கஸ்களுக்கு தகுந்தாற்போல நமது ஜமாஅத்தின் பிரச்சாரகர்களின் எண்ணிக்கை அதிகமாகவில்லை. போதிய பிரச்சாரகர்கள் இல்லாமல் ஒவ்வொரு மாவட்டத்திலும் தாவா பணிகள் தேக்கமடைந்துள்ளன.

தாயீக்களுக்கான பற்றாக்குறையை சரி செய்ய மார்ச்-1 ஆம் தேதி முதல் 31ஆம் தேதிவரை 30 நாள் சிறப்பு வகுப்புகள் நடத்த மாநில நிர்வாகம் முடிவு செய்திருந்தது.

அதனடிப்படையில் இன்று ( 1-3-11) சென்னை மாநில தலைமையகத்தில் ஒரு மாத கால பேச்சாளர் பயிற்சி வகுப்பு காலை 10 மணிக்கு துவங்கியது. தமிழகத்தில் பல்வேறு பகுதியிகளில் இருந்து சகோதரர்கள் இதில் பங்குபெற்றுள்ளனர்.

இதில் பி.ஜே உட்பட பல சிறந்த மார்க்க அறிஞர்கள் மூலம் வகுப்புகள் நடத்தப்படுகின்றது.

பயிற்சியாளர்களுக்கு  தேவையான புத்தகங்கள் , தங்கும் இருப்பிடம்  மற்றும் உணவு பொன்றவைகள் இலவசமாக தரப்படுகின்றது குறிப்பிடதக்கது.