துளசேந்திரபுரம் கிளையில் இலவச கண் சிகிச்சை முகாம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகை வடக்கு மாவட்டம் துளசேந்திரபுரம் கிளையில் கடந்த 22.02.2011, அன்று நாகை மாவட்ட பார்வை இழப்பு சங்கம் மற்றும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இணைந்து நடத்திய இலவச கண்சிகிச்சை முகாமில் 170 க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு பயன் அடைந்தனர்.

13 நபர்களுக்கு அறுவை சிகிச்சைகான ஏற்பாடு செய்யப்பட்டது DR. பூபேஸ் மற்றும் அவரது குழுவினர் நல்ல முறையில் ஒத்துழைப்பு நல்கினர்.

மாவட்ட மருத்துவ அணிச் செயலாளர் ஜகபர் சாதிக், வந்திருந்த அனைவருக்கும் அக்கு பஞ்சர் முறையில் இலவசமாக மருத்துவம் செய்தார்கள்.

ஊராட்சி ஒன்றிய தலைவர் எஹ்சான் பிவி கமாலுதீன், மாவட்ட மற்றும் கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.