துபை ஹோர் அல் அன்ஸ் கிளையில் நடைபெற்ற இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்

DSC03115

DSC03113DSC03149DSC03140DSC03142DSC03125DSC03140தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்து தமிழகத்தில் முஸ்லீம்களிடம் புரையோடியுள்ள மூடப்பழக்கவழக்கங்கள், வரதட்சனை போன்ற செயல்பாடுகளை எதிர்த்துப் பிரச்சாரம் செய்து வருவதோடு மட்டுமின்றி, தமிழகத்தில் மத நல்லிணக்கத்தை எற்படுத்தும் விதமாக மாற்றுமத சகோதரர்களிடத்தில் இஸ்லாத்தினைப் பற்றின சந்தேகங்களைப் போக்கும் வண்ணம் இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் எனும் நிகழ்ச்சிகளையும் செய்து வருகின்றது.

வளைகுடாவில் செயல்பட்டு வரும் வளைகுடா வாழ் சகோதரர்கள், கடல் கடந்து வாழ்வாதாரம் தேட வந்த இடத்திலும் அத்தகைய மார்க்கப் பிரச்சாரங்களை தங்களால் இயன்றவரை செய்து வருகின்றார்கள். அதனடிப்படையில் துபை மண்டல ஹோர் அல் அன்ஸ் கிளை சார்பில் முதீனா ஆச்சி ரெஸ்டாரன்டில் கடந்த 08.01.2010 வெள்ளிக்கிழமை மாலை 5 மணி முதல் 9 மணி வரை இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் நிகழ்ச்சி துபை மண்டல தலைவர் சகோ. சாஜிதுர்ரஹ்மான் அவர்கள் தலைமையில், ஹோர் அல் அன்ஸ் பொறுப்புச் செயலாளர் சகோ. முபாரக்; முன்னிலையில் நடைபெற்றது.

சகோ.ஹாமின் இப்ராஹிம் (அமீரக ஒருங்கினைப்பாளர்) அவர்கள் மாற்று மத சகோதரர்களின் கேள்விகள் மற்றும் சந்தேகங்களுக்கு விளக்கமளித்தார்கள்.

கிளைத்தலைவர் சகோ. அஷரப்அலி அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார்கள். இறுதியில் கிளைச் செயலாளர் சகோ. இஸ்ஹாக் அவர்கள் நன்றியுரை வழங்கினார்கள். கேள்விகள் கேட்ட அனைத்துச் சகோதரர்களுக்கும் இலவசமாக திருக்குர்ஆன் வழங்கப்பட்டது. கலந்துக் கொண்ட மாற்று மத சகோதரர்களுக்கு சீ.டி.க்கள் மற்றும் புத்தகங்கள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சியை சகோ. அபூதாஹிர் அவர்கள் தலைமையில் தொண்டரணி சகோதரர்கள்; சிறப்பான ஏற்பாடுகளை செய்திருந்தனர். இந்நிகழ்ச்சியில் தலைமை நிர்வாகிகள் மற்றும் சத்வா, ஜபல்அலி, ஹோர்அல்அன்ஸ் மற்றும் சோனாப்பூர் கிளை நிர்வாகிகளும் கலந்துக் கொண்டனர்.