துபை-ஹோர் அல் அன்ஸ் கிளையில் வாராந்திர சொற்பொழிவு

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் கடந்த 29/07/2011 அன்று இஷா தொழுகைக்கு பிறகு துபை ஹோர் அல் அன்ஸ் போஸ்ட் ஆஃபீஸ் பள்ளியின் எதிரில் அமைந்திருக்கும்  மர்கஸில் வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் தாயகத்தில் இருந்து வருகை புரிந்திருக்கும் சகோ.அப்துல் மஜீது உமரி அவர்கள் “ரமலானை வரவேற்போம்” என்ற தலைப்பில் மிகச் சிறப்பாக உரையாற்றினார்கள்.இதில் துபையின் பல்வேறு பகுதிகளிலிருந்து சகோதரர்கள் திரளாக கலந்து கொண்டனர்.அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்.