கடல் கடந்து வாழ்ந்தாலும் தான் ஏற்றுக் கொண்ட ஓரிறைக் கொள்கையை அணைவரும் ஏற்றுக் கொள்ள வேண்டும், மானுட சமூகம் இம்மையிலும் மறுமையிலும் நற்பேற்றினைப் பெற்றிட தன்னலம் பாராமல் செயல்பட்டுக் கொண்டு பீறுநடைப் போட்டு வரும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் துபை மண்டல கிளையாக செயல்படும் ஜமாஅத்துத் தவ்ஹீத் துபையின் கிளையான ஹோர் அல் அன்ஸ் கிளையில் கடந்த 22.01.2010 வெள்ளிக்கிழமை இஷாத் தொழுகைக்குப் பின் மார்க்கச் சொற்பொழிவு நடைபெற்றது.
அதில் லெப்பைக்குடிகாடு மெய்தீன் அவர்கள் உரையாற்றினார்கள். அதில் நூற்றுக்கணக்கான சகோதரர்கள் கலந்துக் கொண்டு பயன் பெற்றனர்.
மேலும் 23.01.2010 சனிக்கிழமை இஷாத் தொழுகைக்குப் பின் மாற்று மத சகோதரர்கள் தங்கியிருக்கும் இடங்களுக்கு சென்று தாஃவாவும் செய்யப்பட்டது.