துபை மர்கசில் நடைபெற்ற தர்பியா முகாம்!

துபையில் மர்கசில் நடைபெற்ற தர்பியா முகாம்!துபையில் மர்கசில் நடைபெற்ற தர்பியா முகாம்!துபையில் மர்கசில் நடைபெற்ற தர்பியா முகாம்!கடந்த 17.07.2009 வெள்ளிக்கிழமை காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை ஜமாஅத்துத் தவ்ஹீத் துபையின் கிளையான அல்கோஸ் கிளையின் சார்பில் ஜமாஅத்துத் தவ்ஹீத் மர்கஸில் நிர்வாகிகள் மற்றும் தாயிக்களுக்களுடனான கலந்துரையாடல் மற்றும் தர்பியா வகுப்புகள் JT தலைவர் சகோ. மு. சாஜிதுர் ரஹ்மான் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் குறிப்பாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மஸாயில் விஷயங்களில் மற்ற அமைப்புகள் எவ்வாறு வேறுபடுகின்றன என்பதனை தாஃவாக்களும் செல்லும் சகோதரர்கள் அறிந்துக் கொள்ள வேண்டுமென்றும், அவர்களிடம் இது சம்பந்தமாக கேள்விகள் கேட்கப்பட்டால் பதிலளிக்க ஏதுவாகவும் இந்நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் துவு கிளைகளான டேய்ரா, அல்கோஸ், சோனாப்பூர், சத்வா, ஹோர் அல் அன்ஸ், அவீர் மற்றும் கிஸைஸ் நிர்வாகிகள் மற்றும் துவு தாயிக்கள் சுமார் 70 சகோதரர்கள் கலந்துக் கொண்டு சிறப்பித்தனர்.

இந்நிகழ்ச்சியில் பின்வரும் மூன்று தலைப்புகளில்;

1. அமீரகப் பேச்சாளர் சகோ. பேரணாம்பட் ஜாகிர் அவர்கள் ‘ ஜகாத் சம்பந்தமாக – ததஜ – மற்ற அமைப்புகள் ஒர் பார்வை’ என்ற தலைப்பிலும்,
2. JT மண்டலச் செயலாளர் சகோ. முஹம்மது நாஸர் M.I.Sc அவர்கள் ‘ சஹாபாக்களை பின்பற்றலாமா? ததஜ – மற்ற அமைப்புகள் ஓர் பார்வை’ என்ற தலைப்பிலும்,
3. அமீரக ஒருங்கினைப்பாளர் சகோ. ஹாமின் இப்ராஹிம் அவர்கள் ‘ சூனியம் செய்ய இயலுமா? ததஜ – மற்ற அமைப்புகள் ஒர் பார்வை’ என்ற தலைப்பிலும்.

விளக்கங்கள் அளித்தனர். கலந்துக் கொண்ட சகோதரர்கள் எழுப்பிய சந்தேகங்களுக்கும் பதிலளித்தனர்.

இன்ஷாஅல்லாஹ் அடுத்தடுத்த நிகழ்ச்சிகளில் ஹாருத் மாருத், பிறை போன்ற தலைப்புகளில் விளக்கங்கள் அளிக்கப்படும்.