துபை மர்கசில் இஸ்லாத்தை தழுவிய பேராசிரியர் சதீஸ்

saeedmohamedகடந்த 03.07.2009 வெள்ளிக்கிழமை இரவு 10.30 மணியளவில் துபை ஜே.டி. மர்கஸில் வாரந்தோறும் நடைபெற்று வரும் மார்க்கச் சொற்பொழிவு நிகழ்ச்சியின் போது, கேரளாவை பிறப்பிடமாக் கொண்டு, தற்போது மத்தியப்பிரதேசம் இந்தூரில் வசித்து வரும், துபையில் புரோஃபஷராக பணிபுரிந்து வரக்கூடிய சகேர் சத்தீஷ் என்பவர் இயற்கை மார்க்கமாம் இஸ்லாத்தின் தூய உன்னதக் கொள்கைகளை அறிந்து அதனை ஏற்றுக் கொள்ள முன் வற்து, அமீரக மார்க்க அறிஞர் மௌலவி. அப்துஸ் ஸமது மதனி அவர்கள் ஷஹாதா கலிமா சொல்லிக் கொடுக்க ஷஹாதத் கூறி தன்னை இஸ்லாத்தில் இணைத்துக் கொண்டார். எல்லா புகழும் அல்லாஹ்விற்கே!

மேலும், அச்சகோதரர் இன்ஷாஅல்லாஹ் தாயகம் செல்ல இருப்பதாலும், அவருக்கு இஸ்லாமிய அடிப்படைகளை கற்று கொள்வதற்காக, கர்நாடகா தவ்ஹீத் ஜமாஅத் மர்கஸிலோ அல்லது தமிழகத்தில் செயல்பட்டு வரும் சேலத்திலோ அனுப்பி வைக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

எல்லாம் வல்ல அல்லாஹ் நம் அனைவர்களின் செயல்களுக்கு இம்மையிலும் மறுமையிலும் நற்கூலி வழங்குவானாக!