துபை மண்டல செயற்குழு கூட்டம்

இறைவனது கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் துபை மண்டல செயற்குழு கூட்டம் கடந்த 28.07.2011 அன்று மண்டல தலைவர் மெளலவி.முஹம்மது நாசிர் MISC அவர்களின் தலைமையில் தேய்ரா தலைமை மர்கசில் நடைப்பெற்றது.

இரவு 10.30 மணியளவில் ஆரபிக்கப்பட்ட செயற்குழுவில் நிர்வாகிகளின் அறிமுகம் நடைபெற்றது. பின்னர் அகர வரிசை அடிப்படையில் கிளைகளின் செயல்பாட்டு அறிக்கை வாசிக்கப்பட்டது…

பின்னர் தாயகத்திலிருந்து வருகை தந்திருக்கும் மெளலவி.தாவூத் கைஸர் MISC அவர்கள் “நமது செயல்பாடுகள் ” என்ற தலைப்பில் சிறப்பாக உரையாற்றினார்..

மேலும் வருகின்ற ரமளான் மாத ஃபித்ரா வசூல் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

அடுத்து ரமளான் சஹர் நேர சிறப்பு நிகழ்ச்சிக்கு வாழ்த்தும் நெஞ்சங்கள் மற்றும் வர்த்தக நிறுவனங்களின் விளம்பரம் பற்றி விரிவான ஆலோசனை செய்யப்பட்டது.

இதில் அல்கூஸ், ஜெபல் அலி, சத்வா, சோனப்பூர் 1 மற்றும் 2, பர்துபை, கிஸஸ், அவீர் மற்றும் தேய்ரா ஆகிய
கிளைகலிருந்து 60-க்கும் மேற்ப்பட்ட நிர்வாகிகள், செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் கொள்கை சகோதரர்கள் கலந்து கொண்டனர்.

எல்லாம் புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே!