துபை தேரா கிளையில் பிற சமய சகோதரர்களுக்கான தஃவா நிகழ்ச்சி

2 (3)3 (1)அல்லாஹ்வின் மிகப்பெரும் கிருபையால் வாரந்தோறும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (JT), துபை – தேரா கிளையின் சார்பாக மாற்று மத சகோதரர்களை அவர்கள் இருப்பிடம் (ரூம்) சென்று நாம் ஏற்றுக்கொண்ட சத்திய கொள்கை அதன் தூயவடிவில் சொல்லிவருகிறோம்.

அதன் அடிப்படையில் 28-12-2009 (திங்கள்கிழமை)சகோ. நெடுங்குளம் ரபீக் அவர்கள் (மண்டலச் து.தலைவர்) “ஏகத்துவம் என்றால் என்ன” என்ற தலைப்பில் சிறப்பாக எடுத்துரைத்தார்கள்.

பின்பு மாற்றுமத சகோதரர்கள் கேட்ட கேள்விகளுக்கும் பதில் அளிக்கபட்டது, அவர்களுக்கு இஸ்லாம் ஒர் இனிய மார்க்கம் DVD மற்றும் மனிதனுக்கேற்ற மார்க்கம் என்ற புத்தகமும் வழங்கப்பட்டது.

இந்த மாற்று மத சகோதரகளுக்கான தஃவா நிகழ்ச்சியில் “தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (JT) துபை – தேரா கிளையை சார்ந்த சகோ.மேலை சாந்து உமர், சகோ.மாங்குடி யாசீன், சகோ.சோழபுரம் குத்புதீன், சகோ.பாண்டி ரபீக் மற்றும் சகோ.பரங்கிப்பேட்டை முஹம்மது இஸ்மாயில் ஆகியோர் கலந்து கொண்டனர்.