துபை டேய்ரா பகுதியில் நடைபெற்ற ஜுலை 4 மாநாடு விழிப்புணர்வு பிரச்சாரம்!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் துபை டேய்ரா கிளையில் கடந்த 16.03.2010 இன்ஷா அல்லாஹ் “ஜீலை – 4” சென்னையில் தீவு திடலில் நடக்க இருக்கும் “ஒடுக்கபட்டோர் உரிமை மாநாடு குறித்து விழிப்புணர்வு பிரச்சாரம் செய்யப்பட்டது.

இதில் டேய்ரா பகுதியில் வசிக்கும் சகோதரர்களின் இருப்பிடம் சென்று ஒடுக்கபட்டோர் உரிமை மாநாடு ஏன்? ஏதற்கு? என்று சிறப்பான முறையில் எடுத்துரைக்கப்பட்டது.

மேலும் நடக்க இருக்கும் மாநாட்டுக்கு வெளிநாடுகளில் வாழுபவர்கள் தாயகத்தில் இருக்கும் தங்களது குடும்பம்ங்கள் மற்றும் சொந்தங்களை கலந்து கொள்ளச்  செய்வது என்றும் எல்லாம் வற்றிக்கும் மேலாக பொருளாதார உதவி செய்வது போன்ற முக்கிய விஷயங்கள் சகோதரர்கள் மத்தியில் பிரச்சாரம் செய்யப்பட்டது.

இந்த விழிப்புணர்வு பிரச்சாரத்தில் சகோ.சாந்து உமர் (மக்கள் தொடர்பாளர்),சகோ.முஹம்மது இஸ்மாயில் (துனைச் செயலாளர்),சகோ.சோழபுரம் குத்புதீன் மற்றும் சகோ.மேலை அஹமது ரிஃபாயி ஆகியோர் கலந்து கொண்டனர்.