துபை சோனாப்பூரில் நடைபெற்ற இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்

DSC02946DSC02945DSC02942DSC02939DSC02929தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்து தமிழகத்தில் முஸ்லீம்களிடம் புரையோடியுள்ள மூடப்பழக்கவழக்கங்கள், வரதட்சனை போன்ற செயல்பாடுகளை எதிர்த்துப் பிரச்சாரம் செய்து வருவதோடு மட்டுமின்றி, தமிழகத்தில் மத நல்லிணக்கத்தை எற்படுத்தும் விதமாக மாற்றுமத சகோதரர்களிடத்தில் இஸ்லாத்தினைப் பற்றின சந்தேகங்களைப் போக்கும் வண்ணம் இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் எனும் நிகழ்ச்சிகளையும் செய்து வருகின்றது.

வளைகுடாவில் செயல்பட்டு வரும் வளைகுடா வாழ் சகோதரர்கள், கடல் கடந்து வாழ்வாதாரம் தேட வந்த இடத்திலும் அத்தகைய மார்க்கப் பிரச்சாரங்களை தங்களால் இயன்றவரை செய்து வருகின்றார்கள்.

அதனடிப்படையில் துபையில் உள்ள சோனாப்பூர் பகுதியில் அமைந்துள்ள பலதியா கேம்பில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் கிளையாக செயல்படும், ஜமாஅத்துத் தவ்ஹீத் – துபை சோனாப்பூர் கிளை சார்பில் இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் நிகழ்ச்சி துபை மண்டல தலைவர் சகோ. சாஸிதுர்ரஹ்மான் அவர்கள் தலைமையில், சோனாப்பூர் பகுதி செயலாளர் சகோ. சேக்தாவூது முன்னிலையில் நடைபெற்றது. சகோ. ஹாமின் இப்ராஹிம் (அமீரக ஒருங்கினைப்பாளர்) அவர்கள் மாற்று மத சகோதரர்களின் கேள்விகள் மற்றும் சந்தேகங்களுக்கு விளக்கமளித்தார்கள்.

இந்நிகழ்ச்சியை சகோ. இப்ராஹிம் மற்றும் அபூதாஹிர் அவர்கள் தொண்டரணி சகோதரர்கள் மேற்பார்வையில் சிறப்பான ஏற்பாடுகளை செய்திருந்தனர். இந்நிகழ்ச்சியில் சத்வா, ஜபல்அலி, ஹோர்அல்அன்ஸ் மற்றும் சோனாப்பூரைச் சேர்ந்த மாற்று மத சகோதரர்கள் கலந்துக் கொண்டு பயன் பெற்றனர்.