துபையில் நடைபெற்ற ஒரு நாள் தர்பியா முகாம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் துபை மண்டலத்தில் கட்நத 5-11-2010 அன்று தாயிக்கள் மற்றும் நிர்வாகிகளுக்கான ஒரு நாள் தர்பியா முகாம் மண்டல ஒருங்கிணைப்பாளர் சகோ.ஹாமீன் இப்றாஹீம் தலைமையில் நடைபெற்றது. முதல் அமர்வில் சகோ.ஹாமீன் இப்றாஹீம் அவர்கள் நிர்வாகவியலைப் பற்றி பாடம் நடத்தினார்கள். இதில் COMMUCATION SKILLS (தொடர்புத்திறன்) பற்றி விளக்கிக் கூறினார்கள்.

ஜும்ஆ மற்றும் மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு நடந்த இரண்டாம் அமர்வு மண்டலத் தலைவர் மௌலவி.முஹம்மது நாஸிர் எம்.ஐ.எஸ்.சி அவர்கள் தலைமையில் நடந்தது.

இதில் தாயீக்களின் மார்க்க(ஆய்வு)த் திறனை மேம்படுத்தும் வகையில் தற்பொழுது மக்கள் மத்தியில் இருக்கின்ற மார்க்க ரீதியான கருத்து வேறுபாடுகள் பற்றி விளக்கமளிக்கப்பட்டது.

பின்பு சகோ.ஃபாருக் அவர்கள் ‘மறுமை சிந்தனை’ என்ற தலைப்பிலும்,சகோ.ஸாஜிதுர்ரஹ்மான் அவர்கள் ‘அழைப்பாளனும் அழைப்புப்பணியும்’ என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள்.

இறுதியில் துஆவுடன் கூட்டம் இனிதே நிறைவுற்றது.