துபை அல்கூஸில் நடைபெற்ற இலவச மருத்துவ முகாம்

alkoos_medical_mugam_5alkoos_medical_mugam_4alkoos_medical_mugam_3alkoos_medical_mugam_2alkoos_medical_mugam_1மார்க்கப் பணிகளுடன் சமுகப்பணிகளையும் கடல் கடந்தும் நம் ஜமாஅத் செய்து வருவதன் ஓர் அம்சமாக துபையில் கடந்த 19.12.2008 வெள்ளியன்று துபை அல்கோஸ் பகுதியில் அமைந்துள்ள கிரான்ட சிட்டி மாலில் உள்ள கராமா மெடிக்கல் சென்டரில் மாபெரும் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.

துபை ஜமாஅத்துத் தவ்ஹித் மற்றும் கராமா மெடிக்கல் குழுமம்; இனைந்து நடத்திய இம்முகாம் துவு மருத்துவ அணி செயலாளர் சாதிக் அலி ஒருங்கினைப்பில் JT தலைவர் சகோ. சாஜிதுர்ரஹ்மான் மற்றும் கராமா மெடிக்கல் குழும இயக்குனர் சகோ. வில்லியம்ஸ ஆகியோர் துவக்கி வைத்தனர்.

இம்மருத்துவ முகாமில் சக்கரை (Sugar) நோய் பரிசோதனை, இரத்த அழுத்தப் (BP) பரிசோதனை, உடல் நோய்க்கான பரிசோதனை போன்றவை பரிசோதனை செய்யப்பட்டது. இம்முகாமில் மருத்துவர்கள் தர்மலிங்கம், ஃபெர்னான்டஸ் மற்றம் சீமா ஆகியோர் நோயாளிகளுக்கு சிறந்த முறையில் சிகிச்சை அளித்தனர்.மதியம் 1மணி வரை நடைபெற்ற இம்முகாமில் 121 நபர்கள் சிகிச்சை பெற்றதோடு, இலவச மருந்துகளும் வழங்கப்பட்டன.

நான்காவது முறையாக நடத்தப்பட்ட இம்முகாமில் கேரளா, ராஜஸ்தான், ஆந்திரா, தமிழ்நாடு,பஞ்சாப் மாநில சகோதரர்களும், பங்களாதேஷ் மற்றும் பாகிஸ்தான் சகோதரர்களும் பயன் பெற்றனர். இதுபோன்ற தொண்டுகள், அதிகமான ஏழைகள் பயனடைவதால் தொடர்ந்து நடத்த வேண்டுமென கலந்துக் கொண்ட பெரும்பாலானவர்கள் தெரிவித்தனர். நேரம் இல்லாததால் பலர் திரும்பி சென்றனர்.

மேலும், இம்முகாமில் கலந்துக் கொண்டவர்களுக்கு தேவைப்படும் மேலதிக சிகிச்சைகளுக்கு கட்டண தள்ளுபடி செய்து தருவதாக மெடிக்கல் சென்டர் மேலாளர் சகோ. கிறிஸ்டோபர் தெரிவித்துள்ளார்கள்.

JT துனைத்தலைவர் சகோ. முஹம்மது ரஃபிக் அவர்களின் வழிகாட்டலில் அல்கோஸ் கிளை சகோதரர்கள் தன்னார்வ தொண்டர்களாக சிறந்த முறையில் பணியாற்றினர்.

எல்லாம் வல்ல அல்லாஹ் நம் அனைவர்களின் செயல்களுக்கு இம்மையிலும் மறுமையிலும் நற்கூலி வழங்குவானாக!