துபை அப்பா பள்ளியில் நடைபெற்ற ரமளான் சிறப்பு நிகழ்ச்சிகள்!

appa_mosque_saif_2a-karim3a-karim2abdul-karimappa_mosque_saif_1appa_mosque_saif_4கடல் கடந்து வாழ்ந்தாலும் தான் ஏற்றுக் கொண்ட ஓரிறைக் கொள்கையை அணைவரும் ஏற்றுக் கொள்ள வேண்டும், மானுட சமூகம் இம்மையிலும் மறுமையிலும் நற்பேற்றினைப் பெற்றிட தன்னலம் பாராமல் செயல்பட்டுக் கொண்டிருக்கும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் துபை மண்டல கிளையாக செயல்படும் ஜமாஅத்துத் தவ்ஹீத் துபையில் தொடர்ந்து நடைபெற்று வரும் ரமளான் தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சியின் தொடராக கடந்த 28.08.2009 வெள்ளிக்கிழமை இரவு 10மணி முதல் 11 மணி வரை துபை ஃபிரிஜ்முரார் அப்பாப்பள்ளியில் இன்றைய உலக பிரச்னைகளுக்கு இஸ்லாமே தீர்வு என்ற தலைப்பில் (மாநில தனிக்கை குழு உறுப்பினர்) சகோ. சைஃபுல்லாஹ் ஹாஜா அவர்கள் உரை நிகழ்த்தினார்கள். அதில் நூற்றுக்கணக்கான சகோதரர்கள் கலந்துக் கொண்டு பயன் பெற்றனர். மேலும் கடந்த 4-9-2009 அன்று மௌலவி அப்துல் கரீம் அவர்கள் மறுமையில் ஒரு திகில் பயணம் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். ஏராளமானோர் இதில் கலந்து கொண்டனர்.

எல்லாம் வல்ல அல்லாஹ் நம் அனைவர்களின் செயல்களுக்கு இம்மையிலும் மறுமையிலும் நற்கூலி வழங்குவானாக!