மார்க்கப் பணிகளுடன் சமுகப்பணிகளையும் கடல் கடந்தும் நம் ஜமாஅத் செய்து வருவதன் ஓர் அம்சமாக துபையில் கடந்த 04.12.2009 வெள்ளியன்று துபை அல் வாசல் மருத்துவணை வளாகத்தில் மாபெரும் இரத்த தான முகாம் நடைபெற்றது.
துபை ஜமாஅத்துத் தவ்ஹித் மற்றும் அல் வாசல் மருத்துவமணை இனைந்து நடத்திய இம்முகாம் துவு மருத்துவ அணி செயலாளர் சகோ. சாதிக் அலி ஒருங்கினைப்பில் JT தலைவர் சகோ. சாஜிதுர்ரஹ்மான் அவர்கள் முன்னிலையில் காலை 8 மணியளவில் துவங்கியது.
கடல் கடந்து வாழ்ந்தாலும், கிடைக்கும் சொற்ப விடுமுறை நாளின் ஒரு பகுதியை ஏதேனும் நற்காரியங்களில் பயன்படுத்தி மறுமை நாளின் நன்மையை பெற வேண்டும் என்ற எண்ணத்தின் அடிப்படையில் காலை 8 மணிக்கு நிகழ்ச்சி குறித்த நேரத்தில் தொடங்கியது.
JT கிளைகளான டேரா, அல்கோஸ், சோனாப்பூர், ஹோர் அல் அன்ஸ், சத்வா, அல் கிஸைஸ், அவீர் மற்றும் ஜபல்அலி பகுதிகளிலிருந்து இரத்த தானம் செய்தனர். 100 பேர்களுக்கு மட்டுமே அனுமதி கிடைத்திருந்தும், 138 சகோதரர்கள் குருதி கொடையளித்தனர். அதுமட்டுமல்லாமல் தன்னார்வத்தில் பல சகோதரர்கள் வந்திருந்தும், குறிப்பிட்ட நேரத்தில் முகாமை நிறைவு செய்யும் பொருட்டு, மதியம் 12.15 மணிக்கு நிறைவடைந்நது.
கலந்துக் கொண்ட ஒரு சில சகோதரர்கள் தானம் செய்ய இயலாத நிலையும் நேரமின்மையால் ஏற்பட்டது.
சகோ. அபுதாஹிர் அவர்களின் தலைமையில் தன்னார்வ தொண்டர்ர்கள் சிறந்த முறையில் பணியாற்றினர். மேலும், மண்டல செயலாளர் முஹம்மது நாஸிர், சாந்து உமர், முபாரக், முஹம்மது அலி, ரஃபீக் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.