துபையில் பொதுக்குழு கூட்டம்

அல்லாஹ்வுடைய மாபெரும் கிருபையினால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் – துபை மண்டலத்தின் மாதாந்திர செயற்க்குழுக் கூட்டம் 27-05-2010 அன்று இரவு 10.30 மணியளவில் மண்டல தலைவர் சகோ. சாஜிதூர் ரஹ்மான் அவர்கள் தலைமையில் நடைப்பெற்றது.

இதில் மண்டல நிர்வாகிகள், டெய்ரா,சோனாப்பூர், சத்வா, அல்கூஸ், ஜெபல்அலி, ஹீருல்அன்ஸ் ஆகிய கிளையின் நிர்வாகிகள், தஞ்சை (வ) ஒருங்கிணைப்பு மற்றும் திருவாருர் மாவட்ட ஒருங்கிணைப்பு நிர்வாகிகள், செயல்வீரர்கள், மற்றும் பிரச்சாரர்கள் கலந்து கொண்டனர்.

கீழ்கண்ட விஷயங்களைப்பற்றி ஆலோசித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது:

அனைத்து கிளைகளுடைய கடந்த ஒருமாத செயல்பாட்டு அறிக்கை கிளை செயலாளர்களால் வாசிக்கப்ட்டது.

இன்ஷா அல்லாஹ் வரக்கூடிய ஜீலை 4 ஒடுக்கப்பட்டோரின் உரிமை மாநாட்டிற்கான அனைத்து வகையான உதவிகளையும் தலைமைக்கு செய்வதென முடிவு செய்யப்பட்டது.

துபை மண்டல பொருளாளர் சகோ. மன்சூர் அவர்கள்  தாய்நாட்டிற்குச் செல்வதால், சகோ. இப்ராஹிம் (கடையநல்லூர்) அவர்கள் புதிய பொருளாளராக தேர்வு செய்யப்பட்டார்.