துபையில் நடைபெற்ற ரமளான் சிறப்பு நிகழ்ச்சியில் இஸ்லாத்தை தழுவிய காளிதாஸ்

kalidass_as_abdullah_1dsc02789கடந்த 29.08.2009 சனிக்கிழமை இரவு 10.00 மணியளவில் துபை டேய்ரா கொட்டைப்பள்ளியில் நடைபெற்ற மார்க்கச் சொற்பொழிவின் போது மதுரை அண்ணா நகரைச் சேர்ந்த சகோ காளிதாஸ் என்பவர் இயற்கை மார்க்கமாம் இஸ்லாத்தின் தூய உன்னதக் கொள்கைகளை அறிந்து அதனை ஏற்றுக் கொள்ள முன் வந்து, மாநில தனிக்கை குழு உறப்பினர் சகோ. சைஃபுல்லாஹ் ஹாஜா அவர்கள் ஷஹாதா கலிமா சொல்லிக் கொடுக்க ஷஹாதத் கூறி தன்னை இஸ்லாத்தில் இணைத்துக் கொண்டார். எல்லா புகழும் அல்லாஹ்விற்கே!
மேலும்,

அவருக்கு தமிழ் குர்ஆன் இலவசமாக தாயகத்திலிருந்து அமீரகத்திற்கு வருகை தந்துள்ள சகோ. அப்துல் கரீம் M.I.Sc அவர்களால் வழங்கப்பட்டது. மேலும், அச்சகோதரரின் சகோதரி விபத்தால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் இருப்பதால், அவர்களின் மருத்துவ செலவுக்காக ரூ. 10,000 வழங்கப்பட்டது.